ஸ்டாலின் படத்தை தூக்கிய அதிகாரிகள்.. எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சீல்.. தமிழ்நாடு முழுக்க அதிரடி!
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களை அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். அந்தவகையில் பொன்முடி எம்.எல்.ஏவாக இருக்கும் திருக்கோவிலூர் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

படங்கள் அகற்றம்: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரின் புகைப்படங்கள், புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
பொதுவெளியில் உள்ள தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டு வருகின்றன. அதோடு, அமைச்சர்கள் கார்களில் இருந்து தேசியக்கொடி அகற்றப்பட்டு வருகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து வருகின்றனர். அந்தவகையில் பொன்முடி எம்.எல்.ஏவாக இருக்கும் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகமும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும் சில முக்கியமான தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்வருமாறு:
அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணங்களை தேர்தல் வேலைகளுடன் இணைக்கக் கூடாது. தேர்தல் பணியின்போது அதிகாரப்பூர்வ இயந்திரங்கள் அல்லது பணியாளர்களைப் பயன்படுத்தக் கூடாது.
அதிகாரப்பூர்வ விமானங்கள், வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அரசாங்கப் போக்குவரத்தை அதிகாரத்தில் உள்ள கட்சியின் நலனுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
தேர்தல் கூட்டங்களை நடத்துவதற்கும், தேர்தல் தொடர்பான விமானப் பயணங்களுக்கு ஹெலிபேடுகளைப் பயன்படுத்துவதற்கும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பொது இடங்களை ஏகபோகமாகப் பயன்படுத்தக்கூடாது.
அதிகாரத்தில் உள்ள கட்சியால் பயன்படுத்தப்படும் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் மற்ற கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அத்தகைய இடங்களையும் வசதிகளையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.
ஓய்வு இல்லங்கள், அரசு தங்குமிடங்கள் அதிகாரத்தில் உள்ள கட்சி அல்லது அதன் வேட்பாளர்களால் ஏகபோகமாகப் பயன்படுத்தக்கூடாது. அத்தகைய தங்குமிடங்களை மற்ற கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நியாயமான முறையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.
செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் அரசு செலவில் விளம்பரங்கள் வெளியிடக் கூடாது.
அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் எந்தவொரு நிதி மானியங்களையும் எந்த வடிவத்திலும் அல்லது அதன் வாக்குறுதிகளிலும் அறிவிக்கக்கூடாது. அரசு ஊழியர்களைத் தவிர எந்த வகையான திட்டங்கள் அல்லது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் கூடாது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications