மருத்துவ உள்கட்டமைப்புக்கு விளக்கம் தந்த எம்எல்ஏ எழிலன்.. உதயநிதி அப்படி சொன்னாரே- நெட்டிசன்கள்
சென்னை: நிமிர்ந்த மைக், வளைந்த மைக் என சட்டசபையில் எம்எல்ஏ எழிலன் பேசினார். இதனால் சிரிப்பலை எழுந்தது.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது.
இந்த கூட்டத் தொடர் வரும் மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது 22 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அதிமுக ஆட்சி
அப்போது பல உறுப்பினர்கள் அதிமுக ஆட்சியின் செயல்பாடு குறித்து பேசினார். அதில் எம்எல்ஏ முத்துராஜா பேசுகையில் அதிமுக ஆட்சியில் மற்றும் தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடு குறித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் மருந்து முதல் மருத்துவ ஊழியர்களின் பணி நியமனம் வரை அனைத்திலும் அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது.

திமுக ஆட்சி
ஆனால் திமுக ஆட்சியில் வெளிப்படைத் தன்மை உள்ளது. பொதுவாக எல்லாருக்கும் இதயம் லப் டப் லப் டப் என்றுதான் துடிக்கும். ஆனால் விமர்சனங்களை வைக்கும் மனிதவேயம் இல்லாதவர்களுக்கு இதயம் டப் டப் என துடிக்கும் என பேசியிருந்தார். இவரை தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ நா எழிலன் பேசினார்.

110 விதியின் கீழ் கம்பீர பேச்சு
அவர் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின் பேரவையில் 110 விதியின் கீழ் நிறைவேற்றிய அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என அறிவித்ததற்கு நன்றி. முதல்வர் 110 விதியின் கீழ் பேசும் போது அவர் மைக்கை நிமர்த்தி பேசுவார். அவர் பேசும் போது கம்பீரமாக இருக்கும்.

கட்டுமானம் அல்ல
அவர்தான் மு.க.ஸ்டாலின். வளைந்த மைக் யார் என்று உங்களுக்கு தெரியும் என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. அது போல் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு என்றால் டாக்டர்கள், செவிலியர்கள், இதர ஊழியர்கள்தானே தவிர கட்டடமோ , கட்டுமானோ கிடையாது என்றும் எழிலன் பேசியிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் ," அப்புறம் ஏன் உங்கள் உதயநிதி செங்கல்லை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்" என கேள்வி எழுப்பியுள்ளனர்.

உதயநிதியின் எய்ம்ஸ் செங்கல் பிரச்சாரம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டியதோடு எந்த வேலையும் நடக்கவில்லை என்பதை பொதுமககளுக்கு தெரிவிக்க அங்கிருந்த செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதிய உதயநிதி அதை நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களுக்கு கொண்டு சென்றார். இவரை பார்த்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிறைய மாநிலங்களில் மக்கள் செங்கல்லை வைத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்!












Click it and Unblock the Notifications