அதிமுக எம்எல்ஏ பிஏ பைக்குக்கே பாதுகாப்பில்லை.. சென்னையில்.. கோவில் முன்பே சுட்ட திருடர்கள்!
எம்எல்ஏ பி.ஏ.வின் பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
சென்னை: எம்எல்ஏவின் பி.ஏ வண்டியையே ஆட்டைய போட்டு விட்டார்கள் களவாணிகள். அதுவும் கோயிலுக்கு முன்னாடியே இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது.
அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்தின் உதவியாளரின் செல்லகிருஷ்ணன். ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 7 மணி அளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு மனைவி குழந்தைகளுடன் சென்றார்.

அவர்களை தன்னுடைய பைக்கில்தான் கூட்டி சென்றார். கோவிலின் பின்புறம் இருக்கும் குளக்கரை அருகில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, கோயிலுக்குள் சாமி கும்பிட சென்றார்.
சாமி தரிசனம் முடிந்து 8 மணி போல வெளியே வந்தார். வீட்டுக்கு செல்ல பைக்கை எடுக்க போனால், அங்கே நிறுத்தப்பட்டிருந்த பைக் காணவில்லை. அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தார். அந்த பகுதி முழுக்க தேடி பார்த்தும் பைக் கிடைக்கவில்லை.
பரபரப்பான மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நிறுத்திவிட்டு போன பைக் காணாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பற்றி உடனடியாக மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் செல்லக்கிருஷ்ணன் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த போலீசார் பைக்கை திருடியவரையும், காணாமல் போன பைக்கையும் தேடி வருகிறார்கள்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications