பல்லாண்டு கொடுமைக்கு முற்றுப்புள்ளி.. மனிதக்கழிவுகளை அகற்ற களமிறக்கப்பட்ட "மெஷின்".. உதயநிதி அசத்தல்
சென்னை: இந்தியாவில் பல்லாண்டு காலமாக நிலவி வரும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு சென்னையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மனித கழிவுகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை வெளிநாடுகளில் தானியங்கி இயந்திரங்கள் செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் இதை மனிதர்களே செய்யும் நிலை நீடித்து வருகிறது. அதிலும் பட்டியலின சமூக மக்கள் இந்த பணிகளை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் கொடுமையும் பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது.
சில இடங்களில் இப்படி சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது, உள்ளேயே சிக்கி பலர் பலியாவதும், விஷ வாயு தாக்கி பலர் பலியாகும் கொடுமைகளும் கூட நடக்கின்றன. சென்னை போன்ற வளர்ந்த நகரங்களில் கூட இந்த கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன.

திமுக வாக்குறுதி
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்தது. ஆட்சிக்கு வந்ததும் இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இதில் இயந்திரங்களை களமிறக்கி, பணிகளை மேற்கொள்ள செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது.

அறிமுகம்
இந்த நிலையில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடுக்கும் வகையில் இயந்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.சென்னையில் கழிவுகளை அகற்றும் நவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த நவீன இயந்திரங்கள், தானாக கழிவு நீர் தொட்டிக்குள் சென்று கழிவுகளை அகற்றும் திறன் கொண்டது.

எப்படி செயல்படும்
இந்த எந்திரத்தின் வெளியே இருக்கும் ஸ்கிரீனில் என்னென்ன செய்ய வேண்டும் என்று செட்டிங்ஸ் செய்தால் போதும், தானாக அந்த எந்திரம் குழாய்கள் மற்றும் கழிவு அகற்றும் கூம்புகளை தொட்டிக்கு உள்ளே அனுப்பி, சுத்தம் செய்துவிடும். உள்ளே சிக்கி இருக்கும் கழிவுகளை வெளியே கொண்டு வந்து, அதை சேகரித்து, பின் தேவைப்படும் இடங்களில் நீக்கும் வசதியும் இந்த எந்திரத்தில் உள்ளது.

தொட வேண்டியது
இதனால் மனிதர்கள் இந்த கழிவுகளை தொட வேண்டிய அவசியமே கிடையாது. அனைத்தையும் மெஷின் செய்துவிடும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இது முதல்முறையாக அமலுக்கு வந்துள்ளது. தனது தொகுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை முதல்முறையாக தொடங்கி வைத்தார். மக்கள் இடையே இந்த புதிய திட்டம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கேரளா, ஹரித்வார் போன்ற இடங்களில் இந்த இயந்திரம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

தொழில்நுட்பம்
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள டிவிட்டில், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம், என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications