எங்களுக்கும் கார்.. கோரஸாக கேட்ட எம்.எல்.ஏக்கள்.. அமைச்சரின் ‘தெறி’ ரிப்ளை.. முதல்வர் ஒரே சிரிப்பு!
சென்னை : மாவட்ட சேர்மன்கள் மற்றும் ஒன்றிய சேர்மன்களுக்கு கார் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்ததும், சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் கோரஸாக, "எங்களுக்கும் கார் வழங்கவேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.
எம்.எல்.ஏக்கள் தங்களுக்கும் கார் கேட்டதால் ஷாக் ஆன அமைச்சர் ஐ.பெரியசாமி மனசு இருக்கு.. நிதி ஆதாரம் தான் சுருங்கி இருக்கு.. அதுக்கு யார் காரணம்னு எல்லோருக்கும் தெரியும் என்றார்.
அமைச்சர் சொன்ன பதிலைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களின் சிரிப்பலையால் சட்டப்பேரவை குலுங்கியது.

எம்.எல்.ஏக்களுக்கு கார்
சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பின் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்றும் விதமாக 244 வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 388 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களுக்கு வழங்க Scorpio Classic கார் வாங்கப்பட்டுள்ளது. 19 மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு TATA SAFARI கார் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். முதலமைச்சருக்கு எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள்.. நிதி மட்டும் இருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வார். இது அனைவருக்குமான அரசு என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

அமைச்சர் பதிலால் சிரிப்பலை
அப்போது அவையில் இருந்த எம்.எல்.ஏக்கள் கோரஸாக, எங்களுக்கும் கார் கொடுங்க எனக் கேட்டனர். இதனால் ஷாக் ஆகி பின்னர் சுதாரித்துக்கொண்டு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, மனது கடலை போல விரிந்திருக்கிறது. நிதி ஆதாரம் தான் சுருங்கி இருக்கிறது. அதற்கு யார் காரணம் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறினார். அமைச்சரின் பதிலைக் கேட்டு அவையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் பலரும் சிரித்தனர்.

புதிய அறிவிப்புகள்
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1500 கோடி. ரூ.30 கோடி மதிப்பீட்டில் மலைப் பகுதிகளில் சிறப்புத் திட்டம். ரூ. 69 கோடியில் ஊராட்சிகளுக்கான கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண் வசதிகள் அருகிலுள்ள நகர்ப்புறங்களுடன் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தப்படும். ரூ.70 கோடி மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்ற அறிவ்ப்புகளை வெளியிட்டார்.

தூய்மை காவலர்களுக்கு
மேலும், ஊரகப் பகுதிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் 70 லட்சம் மரக்கன்றுகள் ரூ.275 கோடி மதிப்பீட்டில் நடப்படும். ரூ.137 கோடியில் 10,50,000 சுய உதவிக் குழுக்களுக்கு 21 இலட்சம் முருங்கைக் கன்றுகள், ஊரகப் பகுதிகளில் இரத்த சோகையைக் குறைக்கும் பொருட்டு வழங்கப்படும். 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications