ஆளுநர் ரவிக்கு வலுக்கும் கண்டனங்கள்! ஸ்டெர்லைட் பற்றிய பேச்சு ஆணவத்தின் உச்சம்! ஜவாஹிருல்லா விளாசல்!
சென்னை: ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான ஆளுநர் ரவியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;
''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு அமைப்பினர் ஏராளமாகப் பணத்தைக் கொடுத்து உள்ளூர் மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டி அதன் மூலம் அந்த ஆலை மூடப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.
எந்தவித ஆதாரமும் இல்லாமல் மாநிலத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் அவர்கள் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருப்பது ஆணவத்தின் வெளிப்பாடாகும்.
நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னெழுச்சியாக போராடிய மக்கள் மற்றும் அதற்கு எதிராக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்தவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் ரவி அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறுவது தொடர் கதையாக உள்ளது. அண்மையில் கூட ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவானது தான் இந்தியா எனக் கூறியிருந்தார்.
அதற்கு முன்னர் திருக்குறளுக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும், சனாதனம் பற்றியும் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications