விவசாயிகளை கொடூர முறையில் ஒடுக்க நினைப்பதா... உ.பி. அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..!
சென்னை: அறவழியில் போராடும் விவசாயிகளைக் கொடூர முறையில் ஒடுக்க நினைக்கும் மத்திய அரசுக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

உ.பி. அரசு
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையைக் கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது மோடி அதன் காரணமாக நான்கு விவசாயிகள் உயிர் இழந்ததும் பலர் காயமடைந்ததும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஜனநாயகம் எங்கே?
திட்டமிட்டு விவசாயிகள் மீது மோடி உயிரிழப்பிற்குக் காரணமான வாகனத்தை ஒட்டியவர் ஒன்றிய அமைச்சரின் மகன் என்று கூறப்படுகின்றது.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் சட்டவிரோதமாக கைதுச் செய்யப்பட்டுள்ளதும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் உ.பி. வருவதைத் தடைச் செய்திருப்பதும் பாஜக ஆளும் உ.பி.யில் ஜனநாயக நெறிமுறைகள் முற்றிலும் சீர்கெட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

மனிதநேயம்
மனிதநேயமற்ற வகையில் விவசாயிகள் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோருகின்றேன். வன்முறையைத் தூண்டிய வழக்கும் அவர் மீதும் தொடுக்க வேண்டும். அஜய் சிங்கின் மகனும் அவரை சேர்ந்தவர்கள் மீதும் கொலை வழக்கு (302 இபிகோ) பதிவு செய்து அவர்களைக் கைது செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

கண்டனம்
சட்டவிரோதமாக கைதுச் செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தி அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையைச் செவி சாய்க்காமல் அறவழியில் போராடும் விவசாயிகளைக் கொடூர முறையில் ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் வன்மையான கண்டனங்களை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications