ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய மநீம பெண் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது.. ஜாமீனில் விடுவிப்பு!
சென்னை: ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய மக்கள் நீதி மய்யம் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ். இவர், கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று தனது தோழியுடன் சைதாப்பேட்டையில் இருந்து மாநிலக் கல்லூரி செல்வதற்காக ஆன்லைன் செயலி மூலம் ஆட்டோ ஒன்றை புக் செய்திருந்தார். ஆட்டோ ஆழ்வார்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது கூகுள் மேப்பை ஆப் செய்து ஓட்டுநர் தாறுமாறாக பள்ளம், மேடுகளில் விட்டு ஓட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் சினேகா மோகன் ஆட்டோ ஓட்டுநரை மெதுவாக செல்லுமாறும், சரியான வழியில் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனால் ஆட்டோ ஓட்டுநருக்கும், சினேகா மோகன்தாஸூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சாந்தோம் அருகே ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர் சினேகா மோகன்தாஸை ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
உடனடியாக ஆட்டோவில் இருந்த சாவியை எடுத்த சினேகா மோகன்தாஸ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநரும், சினேகா மோகன்தாஸூம் மாறி மாறி அடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தலையிட்டு இருவரையும் தடுத்தனர். பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த தகராறு குறித்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் ஆட்டோ ஓட்டுநர் சினேகா மோகன்தாஸை தாக்குவதும், பதிலுக்கு சினேகா மோகன் தனது செருப்பை கழட்டி ஆட்டோ ஓட்டுநரை அடிப்பதும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.
காவல் நிலையம் அழைத்து சென்று இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (25) என்பது தெரியவந்தது. மேலும் ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதில் சினேகா மோகன்தாஸுக்கு காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து வைத்து ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த் மீது ஆபாசமாக பேசுதல், அடித்தல், பெண்ணை இழிவு செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மநீம பெண் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரான சினேகா மோகன்தாஸை கைது செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications