டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வழக்கு
சென்னை: தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது.
Recommended Video

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுவையில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.

தினகரனின் அமமுகவுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. கமல்ஹாசனின் மநீமவுக்கு புதுவையில் மட்டும் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் தங்களுக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்படாததற்கு கமல்ஹாசன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மநீம இன்று ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், மநீமவுக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்க வேண்டும்; எம்ஜிஆர் மக்கள் கட்சியானது பேட்டரி டார்ச் சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications