"இப்பதான் ஞானோதயம் வந்துச்சா?" - திமுகவுக்கு சப்போர்ட்டாக வந்த மநீம.. வானதி சீனிவாசனுக்கு ரிப்ளை!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக ஆட்சியில் கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், இடைத்தேர்தலையொட்டி ஈரோடு தொகுதியில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளதால் அரசு இயந்திரம் முடங்கியுள்ளதாகவும் விமர்சித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பதிலடி கொடுத்துள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தாமல், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

வானதி சீனிவாசன் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அரசுக்கு ஆதரவாக அறிக்கை விடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக அரசுக்கு ஆதரவாக, பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

வானதிக்கு மநீம பதிலடி

வானதிக்கு மநீம பதிலடி

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழ்நாடு அரசு கோவில்களை மட்டுமே இடிப்பதாகவும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல்படுவதால் அரசு இயந்திரம் முற்றிலுமாக முடங்கிப் போயிருப்பதாகவும் கூறியிருப்பதன் மூலம் பாஜகவின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனக்கு செலக்டிவ் அம்னீசியா வந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.

அரசு இயந்திரம்

அரசு இயந்திரம்

ஏனெனில் பாஜகவோடு கூட்டணியில் உள்ள அதிமுக ஆட்சி செய்த கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் எண்ணற்ற இந்து கோவில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் இடிக்கப்பட்டபோதும், அப்போதைய காலகட்டங்களில் பல்வேறு தொகுதிகளில் இடைத்தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும் அப்போதைய ஒட்டுமொத்த அமைச்சரவையும் தேர்தல் பணிகளை மேற்கொண்டதால் அரசு இயந்திரம் முற்றிலுமாக முடங்கிப் போனதையும், மக்கள் நலப்பணிகள் நடைபெறுவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டதையும் வானதி சீனிவாசன் எப்படி அவ்வளவு எளிதில் மறந்து போனார் என தெரியவில்லை.

கோமாவில் இருந்தாரா?

கோமாவில் இருந்தாரா?

ஒருவேளை அந்த கடந்த பத்தாண்டுகளில் அவர் கோமா நிலையில் இருந்தாரா? இல்லை செலக்டிவ் அம்னீசியா வந்து தவித்துக் கொண்டிருந்தாரா? என்பது மோடிக்கும், அமித்ஷாவுக்கும், அண்ணாமலைக்குமே வெளிச்சமாகும். தங்களது கூட்டணியில் உள்ள அதிமுகவோடு பின்னிப் பிணைந்து, ஒட்டி உறவாடிக் கொண்டு கடந்த பத்தாண்டுகளில் அதிமுக செய்த அத்தனை அயோக்கியத்தனங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தற்போது தான் ஞானோதயம் வந்தவர் போல் வானதி சீனிவாசன் பேசுவது ஏற்புடையதல்ல.

அரசு சாதி, மதங்களுக்கானது அல்ல

அரசு சாதி, மதங்களுக்கானது அல்ல

ஆனால் சாலையோரம் மட்டுமல்ல மக்களின் சொத்துகளை, அரசு நிலங்களை ஆக்ரமித்திருக்கும் ஆக்ரமிப்பாளர்களை அகற்றும்போது மதத்தின் பெயரால் அதனை தடுக்க நினைப்பவர்களும், கடவுளின் பெயரால் மக்களை தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பவர்களும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மக்கள் பிரதிநிதியான பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மறுக்க மாட்டார் என நினைக்கிறேன். ஏனெனில் அரசு என்பது மக்களுக்கானது தானே தவிர சாதி, மதங்களுக்கானதல்ல என்பதை அவர் புரிந்து கொண்டு பேசுவதே ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அழகாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+