வேற வழியே இல்லை.. அரசியல் அழுத்தம் இருக்கத்தான் செய்யும்.. பொன் மாணிக்கவேல் குறித்து கமல்
கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கமல் கூறியுள்ளார்.
சென்னை: 'வேறு வழியே இல்லை. நேர்மையாக இருப்பவர்களுக்கு அரசியல் அழுத்தம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கும்" என்று பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு கமல் பதிலளித்து உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திரைப்பட தயாரிப்பு சங்கத்தில் நடக்கும் பிரச்னை, பொன். மாணிக்கவேல் மீதான புகார் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுவுக்கு நெருக்கடிகள் தரப்படுகிறதே என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.

உண்மை எந்த பக்கம்?
அதற்கு, "யார் சொல்வது நியாயம் என்பதை புரிந்து கொள்ள நேரம் தேவைப்படுகிறது. நேர்மை எந்த பக்கம் இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கருத்து கூறப்பட்டால் உடனே நாம் அந்த பக்கம் போக முடியாது.

வேற வழியே இல்லை
உண்மை என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். பொன்.மாணிக்கவேல் தனக்கு அரசு அழுத்தம் தருவதாக கூறியிருக்கிறார்.நேர்மையானவர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவது உண்மை தான். ஆனால் அதனை எதிர்கொண்டு தான் பணியாற்ற வேண்டும். வேறு வழியே இல்லை. இதைக் கடந்துதான் நேர்மையாக பணியாற்ற வேண்டும்' என்று பதிலளித்தார்.

ஆரம்ப விழா
பின்னர், 'விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன், கருத்து சுதந்திரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக உணருகிறீர்களா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கமல், "கருத்துச் சுதந்திரப் பிரச்சினை எனது படத்தில் தான் ஆரம்ப விழா நடத்தப்பட்டது என்று வருத்தப்பட்டுக் கொள்கிறேன்.

கருத்து சுதந்திரம்
படம் வெளியான பிறகு, அதைப் பார்த்துவிட்டுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். அதனால் என்ன பிரச்சினை, எதை சரியாகச் சொல்லவில்லை என்று சொன்னால் அது முறையானதாக இருக்கும். ஆனால் படம் வெளியாகும் முன்பே தடை என்று கேட்டால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவது இப்போது அதிகரித்து விட்டது. இது தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே இருக்கிறது என்று கமல் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications