சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல் சார், நீங்க பாஜகவின் "B டீமா".. அசராத நாயகன்.. டாப்கியர் போட்டு வரும் மய்யம்.. மிரளும் கட்சிகள்

கமலின் பிரச்சாரத்துக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: நீங்க பாஜகவின் பி டீமா கமல் சார்? என்று கேட்டபோதும் சரி, கமலுக்கு எம்ஜிஆர் பெயரை சொல்ல தகுதியில்லையாமே என்று கேட்டபோதும் சரி, அசராமல், அதேசமயம் தெள்ளத்தெளிவான பதிலை கூறி பிரச்சாரங்களில் அசரடித்து வருகிறார் கமல்.

மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரத்தில் கமல் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.. இதில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கடந்த தேர்தலில் மநீம 3.77 சதவீதம் வாக்குகளை பெற்ற நிலையில், சமீப காலமாக எதிர்பாராத அதிரடியைக் காட்டி வருகிறது மக்கள் நீதி மய்யம்.

ரஜினி கேட்டுகிட்டா மறுக்கமுடியுமா?.. நிச்சயமா ஒத்துக்குவேன்.. முதல்வர் பதவி குறித்து கமல் கருத்துரஜினி கேட்டுகிட்டா மறுக்கமுடியுமா?.. நிச்சயமா ஒத்துக்குவேன்.. முதல்வர் பதவி குறித்து கமல் கருத்து

 திமுக கூட்டணி

திமுக கூட்டணி

அநேகமாக 3வது அணி கமல் தலைமையில் அமையும் என்ற அளவுக்கு மநீம வளர்ந்துள்ளது.. திமுக கூட்டணி கட்சிகளும் கமலுடன் சேர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரஜினி கமலுடன் சேருவார் என்கிறார்கள்.. ஆக மொத்தம் இந்த முறை தேர்தலில் கமலின் அரசியல் மிக முக்கிய மாற்றத்தை தருவதாக உள்ளது. அதற்கேற்றார்போல் கமலின் பிரச்சாரமும் பெரும் ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.

 கேள்வி பதில்

கேள்வி பதில்

இதற்கு காரணம், கமல் பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம்தான்.. எதிர்தரப்பினருக்கே இது சற்று எரிச்சலை தந்துள்ளதாம்... புகைச்சலையும் ஏற்படுத்தி வருகிறதாம்.. அந்த அளவுக்கு கமலுக்கு மக்கள் செல்வாக்கு கூடியிருப்பதாகவே தெரிகிறது.

பேட்டி

பேட்டி

அதைவிட, ஒவ்வொரு இடத்திலும் கமலிடம் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளும் அதற்கு அவர் அளிக்கும் பதில்களும் தெறிக்க வைக்கின்றன.. சில பதில்கள் வழக்கம்போல புரியவில்லை என்றாலும், அதை மறுபடியும் கமல் விளக்கி சொல்லும் அழகே அலாதிதான்.

காந்தி

காந்தி

"நீங்க பாஜகவின் பி டீமா? உங்களை கார்ப்பரேட்டுகள்தான் டைரக்ட் செய்கின்றவாமே? என்று கேள்விகள் கேட்டாலும், அதற்கும் கமல் டென்ஷன் ஆகவில்லை.. பதட்டமும் ஆகவில்லை.. "நான் காந்தியாரின் பி டீம். பிக்பாஸுக்கு மட்டும்தான் என்னை டைரக்ட் பண்ண முடியும்... அதே நாடு, நகரம், பெருநகரமாக நாடாக மாற வேண்டுமானால் கார்ப்பரேட்டுகள் கண்டிப்பாக வேண்டும்... சிறுகுறு தொழிலும் கார்ப்பரேட்டுகளும் சம அளவில் இருக்க வேண்டும் என்ற காட்டமான பதிலை கமலால் மட்டுமே சொல்ல முடியும்.

 மைக் பிரச்சாரம்

மைக் பிரச்சாரம்

மதுரையில் மைக் பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம், வேனில் நின்றபடி பிரச்சாரம் என்று சொல்லி போலீசிடம் அனுமதி வாங்கும்படி கமல் சொல்லி இருந்தாராம்.. அதன்படியே அனுமதியும் வாங்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் போலீஸ் அந்த பெர்மிஷனை ரத்து செய்து விட்டதாம்.. இதை கேள்விப்பட்ட கமல் எந்தவித டென்ஷனும் ஆகாமல், பரவாயில்லை, நாம வேனில் நின்று கொண்டே மக்களை சந்திப்போம் என்றுதான் பிரச்சாரத்தை துவங்கி உள்ளார். ஏற்கனவே டார்ச் லைட் கிடைக்காத வருத்தம் இருந்தாலும், பிரச்சாரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்ட வருத்தம் கமலுக்கு இல்லாமல் இல்லை.. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

திருச்சி

திருச்சி

எம்ஜிஆர் பெயரையும் முன்வைத்து, மதுரையையும் தலைநகராக்குவோம் என்று சொன்னதுமே மண்டையை குழப்பிக் கொண்டவர்கள் ஏராளம்.. திருச்சியைதானே எம்ஜிஆர் தலைநகராக்க ஆசைப்பட்டார், இவர் ஏன் மதுரையை சொல்கிறார்கள் என்ற முணுமுணுப்புகளும் எழாமல் இல்லை..

 வெளிப்படை நிர்வாகம்

வெளிப்படை நிர்வாகம்

மேலும் செல்லும் இடமெல்லாம் எம்ஜிஆரின் பெயரை வலுவாக சொல்லி பிரதான கட்சியின் எரிச்சலை கூட்டி வருகிறார்.. ஊழல் குறித்து பேசி, அனைவரையும் வாயடைக்க வைத்து வருகிறார்.. எல்லாவற்றிற்கும் மேலாக, இல்லத்தரசிகளின் வாழ்வாதாரத்துக்கு கமல் தெரிவித்துள்ள அறிவிப்பு மிக முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.. இதைதவிர, வெளிப்படையான நிர்வாகம், மக்களின் ஆலோசனைபடியே நிர்வாகம் என்று கமல் சொல்லும் புதுதினுசு வழிமுறைகள் அனைவரையும் யோசிக்க வைத்தும் வருகின்றன.

English summary
MNM Leader Kamalhasans Compaign and Speeches
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X