Vanathi: "பட்டத்து யானை- முற்றத்து பூனை!" தேவையில்லாம பேசாதீங்க! வானதியை விமர்சித்த மநீம சினேகன்
சென்னை: ராஜ்யசபாவில் கமலின் கன்னிப் பேச்சு புரியவில்லை என கூறிய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும் கவிஞருமான சினேகன் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு முக்கிய கேள்வியையும் வானதியிடம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து சினேகன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்களுக்கு வணக்கம்! கோவை தெற்கு இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் நீங்கள் அல்ல, எங்கள் தலைவர்!

பட்டத்து யானையின் பக்கம் நின்று கொண்டு முற்றத்து பூனையும் நானும் யானைதான் யானைதான் என சொல்வது போல் இருக்கிறது உங்கள் அணுகுமுறை! உங்களுக்கு எப்போதெல்லாம் ஊடக வெளிச்சம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் எங்கள் தலைவரை பற்றி பேசி வெளிச்சத்தை வாங்கிக் கொள்கிறீர்கள்.
நீங்கள் பேசுவதே உங்களுக்கு புரியாது, இதில் எங்கள் தலைவர் பேசுவது உங்களுக்கு எப்படி புரியும்! அவரது கூரிய சிந்தனையை புரிந்து கொள்வதற்கு நுரைத்த ஞானம் தேவைப்படுகிறது.
சமூகநீதியும் சமத்துவமும் அறமும் நேர்மையும் கலந்த அந்த நுரைத்த ஞானம் என்பது உங்களுக்கு ஒவ்வாமை!தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்கள் டெல்லி முதலாளிகளின் மனதை சந்தோஷப்படுத்த அடிக்கடி எங்கள் தலைவரை பார்த்து கை நீட்டுகிறீர்கள்.
அது பேராபத்தில் போய் முடிந்து விட போகிறது. வருகிற தேர்தலில் உங்களுக்கு சீட் உண்டா? அதில் கவனம் செலுத்துங்கள். தேர்தலில் சந்திப்போம் என சினேகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 4 இடங்களை வென்றது. அதில் கோவை தெற்கு தொகுதியும் பாஜக வென்றதே. இந்த தொகுதியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
இவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன் சுமார் 1728 வாக்குகளில் தோல்வியடைந்தார். அப்போது தனித்து போட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு ராஜ்யசபா சீட்டையும் பெற்றுக் கொண்டு டெல்லி சென்றுள்ளார்.
அங்கு மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசிய பேச்சுகள் குறித்துதான் தற்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வானதி கூறுகையில், "கமல் பேசியது எனக்குப் புரியவே இல்லை. புரிந்தால் எனக்குக் கூறுங்கள். "கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, கமல்ஹாசனின் பேச்சு புரியாததால்தான் மக்கள் அவரைத் தோற்கடித்து அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் யாருக்காக நிறுத்தப்பட்டாரோ அந்த முதலாளிகள் அவரை இப்போது டெல்லிக்கு அனுப்பி இருக்கின்றனர். அவர்களுக்காவது அவர் நியாயம் செய்யக் கூடாதா?" என்றும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதற்குத்தான் சினேகன், வானதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது கோவை தெற்கு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு வானதி போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. கோவை தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்ல விரும்புவதாக சொல்லப்படுகிறது. பாஜகவில் தேசிய தலைமையில் உள்ளவர்களை அண்மைக்காலமாகத்தான் மக்களுக்கு பரீட்சயம்.
அது வரை வானதி சீனிவாசன், தமிழிசை, எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன் உள்ளிட்டோர்தான் மக்கள் அறிந்த தலைவர்கள். வானதி சீனிவாசன் பாஜகவுக்கு நிறைய உழைத்திருக்கிறார். அவர் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார். டெல்லி தலைமையின் குட் வில் புக்கில் அவரது பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அவருக்கு சீட் கொடுப்பார்களா என சினேகன் கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications