யாரையும் விமர்சிக்காமல்... மக்களுக்கு நல்லது செய்வதே எங்கள் கொள்கை... அனுஷா ரவி பளீச்
சென்னை: யாரையும் விமர்சிக்காமல் மக்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்று அக்கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளரும் திருப்பூர் தெற்கு வேட்பாளருமான அனுஷா ரவி ஒன் இந்தியா தளத்திற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. திமுக, அதிமுக தவிர மூன்றாவது அணியாக மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் உருவெடுத்துள்ளது.

அக்கட்சியின் வேட்பாளர் பட்டியில் கடந்த வாரம் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளராக அனுஷா ரவி நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்திருந்த சிறப்புப் பேட்டியில் அவர் பேசுகையில், "ஒரு கல்வியாளராகவும் தொழில் முனைவோராகவும் இருந்தபோது, பல நல்ல விஷயங்களை என்னால் செய்ய முடிந்தது. அப்போது 10 பேருக்கு நல்லது செய்ய முடிந்தது. அரசியலுக்கு வந்தால் 100 பேருக்கு நல்ல செய்ய முடியும் எனக் கருதுகிறேன். இதனால்தான் அரசியலுக்கு வந்தேன்" என்றார்.
மக்கள் நீதி மய்யத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்துப் பேசிய அவர், "கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச்செல்வதுதான் முதல் பணி. நேர்மையான ஒரு தமிழக அரசு அமைந்து, இந்த மாநிலத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கைகள். இந்தக் கொள்கையை மக்களிடம் எடுத்துச்செல்வதே எனது பணி" என்று கூறினார்.
மேலும், மக்கள் நீதி மய்யத்தில் தற்போது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பலரும், ஏற்கனவே எதோ ஒரு வகையில் மக்களுக்கு பணியாற்றி வருபவர்கள் தான் என்றும் அவர்கள் மூலமே எங்கள் கொள்கைகளை எடுத்துச் செல்ல முயல்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுதவிர சமூக வலைத்தளங்களையும் ஊடகங்களையும் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பேசிய அவர். "கட்சியில் சேர்ந்த சில நாட்களே ஆகிறது. அப்படியிருக்கும் சூழ்நிலையில் என்னை நம்பி தேர்தலில் களமிறங்கும்படி என்னிடம் கேட்டுள்ளனர். எனக்கு நன்கு தெரிந்த ஊர், கடந்த 50 ஆண்டுகளாக அங்குதான் கல்விப் பணி செய்து வருகிறேன். தினசரி அங்கேயே இருப்பதால், மக்களுக்கு என்ன தேவை என்பது நன்றாகத் தெரியும்" என்றார்
மேலும், யாரையும் விமர்சிக்காமல் மக்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்றும் அந்த திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, மக்கள் வாக்களித்தால் நிச்சயம் மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications