29 ஆம் தேதி சென்னையில் சினேகனுக்கு திருமணம்.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தலைமை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமிட்டி உறுப்பினரும் பாடலாசிரியருமான சினேகனுக்கு வரும் 29 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடத்தி வைக்கிறார்.

நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 43 வயதாகும் இவர் பிக்பாஸ் சீசன் 1 மூலம் புகழ்பெற்றார். அந்த சீசனில் ரன்னர் அப்பாக வந்தவர்.

இவர் கமலின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து தற்போது அக்கட்சியின் கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார்.

களம்

களம்

இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதியில் களமிறங்கினார். 2.1 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். அது போல் இந்த ஆண்டு நடந்த விருகம்பாக்கம் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார்.

சென்னையில் திருமணம்

சென்னையில் திருமணம்

2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் 8 ஆண்டுகளாக நடிகை கன்னிகாவை காதலித்து வந்தார். இதையடுத்து இரு வீட்டாருக்கு தெரியவந்து இவர்களுக்கு வரும் 29ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த திருமணத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்குகிறார்.

29 இல் திருமணம்

29 இல் திருமணம்

கிரீன் பார்க் ஹோட்டலில் காலை 10.45 மணிக்கு இவர்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். கன்னிகா தேவராட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கல்யாண வீடு

இவர் கல்யாண வீடு என்ற டிவி தொடரிலும் நடித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார் சினேகன். அவரும் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார். சினேகன் இனிய நண்பர் என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+