முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கல்?.. "#பயமா முதல்வரே".. சட்டசபை லைவ் எங்கே?.. வைரலாகும் ஹேஷ்டேக்
தமிழக சட்டசபை நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி #பயமா முதல்வரே என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் விவகாரத்தை சில அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன... இந்த கோரிக்கையை அன்றே ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தெரிவித்திருந்தது.. ஆனால் செய்யவில்லை.
இத்தனைக்கும் பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்போது, தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது..

மீடியா
அதேசமயம், சட்டசபை நடக்கும்போது, ஆளுங்கட்சிக்குச் சாதகமான, தேர்ந்தெடுத்த காட்சிகள் மட்டும் மீடியாக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது என்றும், இதனால் தாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் தங்கள் தொகுதியின் மக்கள் பிரச்சினைகள், மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசுகிறார்களா என்பது வாக்களித்த மக்களுக்கு தெரிவதில்லை என்றும் பரவலான கருத்துக்களும் எழுந்து வருகின்றன.

கூட்டத்தொடர்
இப்படிப்பட்ட சூழலில்தான் திமுக, இந்த முறை தேர்தல் வாக்குறுதியில் நேரடி ஒளிபரப்பு குறித்து தெரிவித்திருந்தது.. ஆளுநர் மீதான உரை நிகழ்த்தும்போதே நேரடியாக ஒளிபரப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.. தற்போது, சட்டமன்றத்தில் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையிலும், திமுக அரசு சட்டமன்ற நிகழ்வுகளை இன்னும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

எஸ்டிபிஐ
எனவே திமுகவிடம் இந்த கோரிக்கையை சில அரசியல் கட்சிகள் நேரடியாகவே வலியுறுத்த தொடங்கி உள்ளன.. இதை 2 நாளைக்கு முன்பு, முதலில் ஆரம்பித்து வைத்ததே மநீம தலைவர் கமல்தான்.. "பட்ஜெட் மீதான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, சட்டசபை நேரடி ஒளிபரப்பு நாளை முதலாவது துவங்க தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்" என்று கேட்டிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியும் அறிக்கையாக வெளியிட்டிருந்தது.

நேரடி ஒளிபரப்பு
இந்நிலையில், பயமா முதல்வரே என்ற பெயரில் ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.. நேரடி ஒளிபரப்பு என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்ற தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, முதல்வர் ஸ்டாலினை டேமேஜ் செய்வது போன்று எதிர்க்கட்சிகள் இந்த ஹேஷ்டேக்கை அரசியலாக்க தொடங்கி உள்ளனர்.. குறிப்பாக, நீதி மய்யத்தினர் ட்விட்டரில் #பயமா_முதல்வரே #சட்டசபை_நேரடி_ஒளிபரப்பு உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சந்தேகங்கள்
அதேபோல, கடந்த 2012-ல் இது சம்பந்தமாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், அப்போதைய அதிமுக அரசு, அரசின் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, நேரடி ஒளிபரப்பு என்ற அறிவிப்பை தட்டி கழித்ததுபோல, திமுகவும் தட்டிக்கழிக்கிறதா என்ற சந்தேகங்களையும் சிலர் முன்வைத்து வருகின்றனர்.. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை திமுக விரைவில் சரி செய்யும் என்றே தெரிகிறது..

திமுக
காரணம், சட்டசபையில் திமுக அரசு, பரந்த எண்ணத்துடனும், தாராள மனப்பான்மையுடனும், அரசியல் நாகரீகத்தை கடைப்பிடித்து வருகிறது.. இதை அதிமுக, பாஜக போன்ற கட்சிகளே மறுக்க முடியாது. அப்படி இருக்கும்போது, நேரடி ஒளிபரப்பு வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுகவுக்கு பெரிய சிக்கலாக இருக்காது என்றே தெரிகிறது.. ஒருவேளை நேரடி ஒளிபரப்பு ஏற்படுத்தினால், அது திமுகவுக்குதான் பிளஸ் ஆக அமையும்.. அத்துடன், எதிர்க்கட்சிகளின் சட்டசபை நகர்வையும் பொதுமக்களால் நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பாகும்.

நிதி பிரச்சனை
ஏற்கனவே கஜானா காலி செய்யப்பட்டிருந்த சூழலில்தான் திமுக ஆட்சிபொறுப்பை ஏற்றது.. அதற்குள் லாக்டவுன் பிரச்சனை ஏற்பட்டு, இப்போதுதான் தளர்வுகள் அமலாகி உள்ளன.. எனவே, இனிதான் வருமானத்திற்கான வழியும் திறக்கப்பட்டுள்ளது.. ஆனால், அதற்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நெருக்கடி தருவது முழுக்க முழுக்க அரசியல் என்றே கருதப்படுகிறது.. அதிமுக அரசை இத்தனை காலமும் கேட்காமல், ஆட்சிக்கு வந்த 3 மாதம் ஆன திமுகவை பார்த்து தினம் தினம் கேள்வி எழுப்புவதும், அதையே உணர்த்துவதாக தெரிகிறது.

நெருக்கடி
ஒருவேளை உண்மையிலேயே நிதி நெருக்கடி காரணமாக இருந்தால், தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி வாயிலாகவும் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்த யோசனையையும் தவிர்த்துவிட முடியாது.. எப்படி பார்த்தாலும், நேரடி ஒளிபரப்பு என்ற வாக்குறுதியை திமுகவும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளதால், இதற்கான அறிவிப்பும் விரைவில் நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..!
-
"திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவியை மாத்திட்டாங்களே..” முதல்வர் ஸ்டாலின் கிண்டல்! -
வெல்லும் தமிழ்ப்பெண்களே! தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுங்கள்! ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து -
இந்தியாவுக்கு அனுமதி கொடுக்க அமெரிக்கா யாரு..மானத்தை காப்பாத்துங்க மோடி..ரஷ்யா விவகாரத்தில் ஸ்டாலின் -
பெண்களுக்கு 2 லட்சம் தரும் தமிழக அரசு.. தொழில் தொடங்குவோர் அறிய வேண்டிய புதிய மாற்றங்கள் -
கலைஞர் கனவு இல்லம் திட்டம்: 7 லட்சம் வீட்டை கட்டும் அரசு! சொந்த வீடு கட்டுபவர்களுக்கு கோல்டன் சான்ஸ் -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
யுபிஎஸ்சி தேர்வில் 56 பேர் தேர்ச்சி! நான் முதல்வன் திட்டத்தின் முதற்பகுதியே இப்படியா? ஸ்டாலின் -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
1,000 மாடல் பள்ளிகள், 7 லட்சம் வீடுகள், தொழில்பூங்கா! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அம்ச அறிவிப்பு -
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.. 59 ஆண்டுகள் முன் அண்ணா ஆட்சிக்கு வந்த வரலாறு -
தேர்தல் முடிந்ததும் அதிமுக பாஜக கண்ட்ரோலுக்கு போயிவிடும்.. நிதிஷ் நிலமைதான் எடப்பாடிக்கு.. ஸ்டாலின் -
“திருச்சியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் முதல்வர் ஸ்டாலின்”.. கேஎன் நேரு கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications