Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோட்டுல போட்டு அடிச்சாங்க.. என் மாமனார் பெயரை கெடுக்க சதி.. பாடகர் மனோ மருமகள் பரபர குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எனது கணவரும், அவரது அண்ணனையும் பல வாகனங்களில் வந்த கும்பல் கற்களை எடுத்து தாக்க ஆரம்பித்துவிட்டனர். இதன் பின்னணியில் வேறு காரணம் இருக்கிறது. எனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது." என மனோவின் மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞரும், 16 வயது சிறுவன் ஒருவரும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மது போதையில் சிறுவன் உட்பட இரண்டு பேரை தாக்கியதாக மனோவின் மகன்கள் சாஹிர் மற்றும் ரஃபீக் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Mob attacked with the intention of tarnish my father-in-law s name Mano s daughter-in-law made a allegation

அதைத்தொடர்ந்து, மனோ மகன்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மனோவின் இரண்டு மகன்கள் உட்பட 3 நபர்கள் தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மனோவின் மகன்களை, புகார் அளித்த எதிர் தரப்பினர் கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த காட்சிகளில் பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர் மற்றும் ரஃபீக் ஆகியோரை 4 இருசக்கர வாகனங்களில் வந்த 16 வயது சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் கல், கட்டையால் கண்மூடித் தனமாக தாக்குகின்றனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் வந்துள்ளனர். உடனே அந்த கும்பல் தப்பிச் சென்ற நிலையில், இருவரை மட்டும் போலீசார் பிடித்ததாகவும், சிறுவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது எனக் கூறி மனோ மகன்கள் தரப்பு அவர்களை விட்டு விட்டதாகவும் கூறுகின்றனர். மனோவின் மகன்கள், 10+ பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படும் புதிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மனோவின் மருமகள் பேசுகையில், "எனது கணவரும், அவரது அண்ணனும் ஏன் தவறாக பேசுகிறீர்கள் என்று அந்த பசங்களை கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்குள் பல வாகனங்களில் வந்தவர்கள் கற்களை எடுத்து தாக்க ஆரம்பித்துவிட்டனர். கல், கட்டையெல்லாம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. கண்மூடித்தனமாக தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்கள் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை. வேறு ஏரியாவைச் சேர்ந்தவர்கள்.

இதன் பின்னணியில் வேறு காரணம் இருக்கிறது. எனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது. எனது மாமனார், எனது கணவர், அவரது அண்ணன் ஆகியோரின் பெயர்களை கெடுக்க வேண்டும் என திட்டத்தோடு இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. சிறுவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் நாங்கள் புகார் அளிக்கவில்லை.

எங்களிடம் போலீசார் வந்து சரிவர விசாரிக்காமல், என் கணவரையும், அவரது அண்ணனையும் தேடி வருகின்றனர். வேலை செய்பவர்களின் மகன்களை போலீசார் கைது செய்து கூட்டிச் சென்றுள்ளனர். பாதுகாப்புக்காக நாங்கள் இப்போது புகார் அளிக்க உள்ளோம்.

என் கணவரை தலையில் கல்லால் அடித்து, கீழே விழ வைத்து கட்டையால் அடித்து எங்கள் மாமாவை பெரிய கல்லை எடுத்து நெஞ்சிலேயே அடித்துள்ளனர். எங்கள் வீட்டில் வேலை செய்தவர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். எங்களிடம் இதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+