ஆர்வமாக செல்போன் பேசிய நபர்.. சட்டென நடந்த விபரீதம்.. சென்னையில் பதிவான பரபரப்பு சிசிடிவி காட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடக்கும் குற்றச் செயல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருக்கிறது. அப்படியான ஒரு சம்பவம்தான் இது.

Recommended Video

    ஆர்வமாக செல்போன் பேசிய நபர்.. சட்டென நடந்த விபரீதம்.. சென்னையில் பதிவான பரபரப்பு சிசிடிவி காட்சி

    அதிலும், கொரோனா நோய் காலத்திற்கு பிறகு, வேலைவாய்ப்பு, தொழில்துறை சரிவடைந்த நிலையில், குற்றச் செயல்கள் அதிகரித்தபடிதான் இருக்கிறது.

    இப்படித்தான் சென்னை மாதவரம் பகுதியில் சாலையோரம் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார் ஒரு நபர். அடுத்த சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை நீங்களே வீடியோ காட்சியில் பாருங்கள்.

     மின்னல் வேகத்தில்

    மின்னல் வேகத்தில்

    சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகரில் இரவு நேரத்தில் சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் ஒரு நபர். இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் திடீரென நொடிப் பொழுதில் அவரின் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    பஸ்சில் செல்போன் பறிப்பு

    பஸ்சில் செல்போன் பறிப்பு

    மேலும் இதே போல, இந்த சம்பவம் நடப்பதற்கு முன் செங்குன்றத்தில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் 57 பஸ்சில் பயணம் செய்த ஒருவரிடம் செல்போனை பறித்து விட்டு மர்ம நபர் தப்பி ஓடினார்.

    போலீஸ் ரோந்து

    போலீஸ் ரோந்து

    இதுபோல் தொடரும் செல்போன் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர். இந்தபகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

     விழிப்புணர்வு பாடம்

    விழிப்புணர்வு பாடம்

    செல்போனை பொது இடங்களில் பேசும்போது கைகளில் எப்படி வைத்திருக்க வேண்டும், எப்படி வைத்தால் பாதுகாப்பு இல்லை என்பதை இந்த வீடியோவை பார்த்தே அறிந்து கொள்ள முடியும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+