Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“வெரி டேஞ்சர்”.. வந்ததிலேயே மோசம் மோக்காதான்! இன்னொரு புயல் வருதாம் -பூவுலகு சுந்தர்ராஜன் ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மியான்மர் மற்றும் வங்கதேச நாடுகளை கடுமையாக தாக்கி இருக்கும் மோக்கா புயலால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேலும் ஒரு புயலும் வருவதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தெரிவித்து உள்ளார்.

கடந்த மே 8 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது.

Mocha storm is dangerous than ever and new storm is coming - Poovulagu Sundarajan

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 10 ஆம் தேதி காலை அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 520 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 10 ஆம் தேதி இரவு புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஏமன் நாட்டின் 'மோக்கா' என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இது படிப்படியாக தீவிரமாகி இன்று காலை தீவிர புயலாக நள்ளிரவில் தீவிர புயலாகவும் வலுவடைய உள்ளதாக கணிக்கப்பட்டு இருந்தது. இந்த புயல் அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து 13 ஆம் தேதி சற்று வலுவிழந்து 14 ஆம் தேதி மணிக்கு 120 - 145 கிலோ மீட்டர் வேகத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று வங்கதேசம் - மியான்மர் இடையே மதியம் இந்த மோக்கா புயல் கரையை கடந்தது. இந்த புயல் வானிலை மையம் கணித்ததைவிட மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் அதிக வேகத்தில் கரையை கடந்து இருக்கிறது. அப்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் இரு நாட்டுப்பகுதிகளும் சூறையாடப்பட்டு உள்ளன.

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருக்கின்றன. புயல் கரையை கடக்கும்போது கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. வங்கதேசத்தின் அந்த 2 நகரங்களில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளார்கள்.

மியான்மர் நாட்டின் கியெக்பியூ என்ற நகரமும், அதை ஒட்டிய பல கடலோர பகுதிகளும் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கும் வெளியேற்றப்பட்டு உள்ளார்கள். புயலின் தாக்கம் அசாம், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் எதிரொலிக்கலாம் என்பதால் முன்கூட்டியே வானிலை மையம் அப்பகுதி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

உலகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 16புயல்கள் உருவாகியுள்ளன, அதில் "மோக்கா புயல்"தான் மிகவும் பலமானது அல்லது வீரியமானது என்கின்றன தரவுகள். இதில் காற்றின் வேகம், பானி புயல் அளவிற்கு இருந்ததாகவும், இதுவரை வட இந்தியப் பெருங்கடலில்/வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட மிக தீவிர புயல் மோக்காதான் என்றும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். மியான்மாரின் பல பகுதிகளுக்கு கடுமையான சேதத்தை விளைவித்து சென்றுள்ளது மோக்கா. இன்னொரு புயல் தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+