Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரம் பம்ப் செட்கள் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிக அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

Modern Pump Sets for Free Power Users DMK s Key Poll Promise

விவசாயிகளுக்கான அறிவிப்புகள்

இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரம் பம்ப் செட்டுகள் வழங்கப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 3,500 ஆகவும் கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

வேளாண்மைக்கு ஆதாரமான நீரைச் சேமிக்க நுண்ணீர்ப் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும்.

உழவர்கள் தங்கள் பகுதிக்கு ஏற்ற பயிர்களைச் சிறந்த சாகுபடி முறைகளைப் பின்பற்றி அதிக மகசூலை அடைந்திடும் வகையில், "கிராம அளவிலான பயிர்ச் சாகுபடித் திட்டம்" தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

முதமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு 5 லட்சமாகவும், காப்பீட்டு தொகை 10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

புதுமைப்பெண் தமிழ் புதல்வன் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.

முதியோர் உதவித்தொகை 1200 ரூபாயில் இருந்து 2000 ஆக உயர்த்தப்படும்.

மாற்றுத்திறனாளி உதவித்தொகை 1500 ரூபாயில் இருந்து 2500 ஆக உயர்த்தப்படும்.

மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரண தொகை 8,000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக ஆக உயர்த்தப்படும்.மீண்டபிடி குறைவு கால் சிறப்பு நிவாரண தொகை 6 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.

சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஆக இருக்கும் பெண்கள் தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில் பிணை எதுவுமின்றி 5 லட்சம் வரை மானியத்துடன் வாங்கி கடனுதவி வழங்கப்படும்

பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டேர் ஒன்றிற்கு இரவை பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு 25000 ரூபாய் வழங்கப்படும், நீண்டகால பயிர்களுக்கு 27000 ரூபாயாகவும், மானவாரி பயிர்களுக்கு 12000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மாவட்டங்கள் முதன் வட்டங்கள் வரை மருத்துவமனையில் டயாலசிஸ் சிகிச்சைக்கு கருவிகள் 2 மடங்கு உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

8வது ஊதியக்குழுவை ஒன்றிய அரசு செயல்படுத்தியதுடன் அதனை மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செயல்படுத்த குழு அமைக்கப்படும்.

அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 லட்சம் காலி பணியிடங்களை காலதாமதமின்றி நிரப்பப்படும்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை.

5 ஆண்டுகள் உயர்கல்வி படிக்கும் 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்

வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன். இதனை பயன்படுத்தி வாஷிங்மிஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி போன்ற பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

கடலோரங்களில் மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குளம் அமைக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள் விளையாட்டரங்கம்.

பிசி, எம்பிசி, டிஎம்சி பிரிவினர் தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

பல்வேறு துறைகளில் பணியாற்றும் திருநர், திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

பொள்ளாச்சியில் மொழி போராட்ட காட்சிக்கூடம் அமைக்கப்படும்

திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளின் அருகாமையில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள் அமைக்கப்படும்.

50 புதிய செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.

5,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்.

கடலூர் தஞ்சாவூர் தூத்துக்குடி திருவெல்வேலி ராமநாதபுரம் சேலம் திருப்பூர் விழுப்புரம் திருவண்ணாமலை கோவை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்காண நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பத்திரிகையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் 2 மடங்காக உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்கா அமைக்கப்படும்.

MSME நிருவாண பொருட்கள் உலக அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிக தளம் உருவாக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+