Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் செல்லும் ஓபிஎஸ்? எடப்பாடி மீது "சந்தேகத்தில்" மோடி? அரசியல் வல்லுனர் உடைத்த ரகசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை ஒருநாள் எடப்பாடி பழனிசாமி கழற்றிவிட்டுவிடுவார், அதனால் எடப்பாடி மீது மோடிக்கு சந்தேகம் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக உட்கட்சி மோதல் நடக்கும் நிலையில், நேற்று முதல்நாள் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். ஜி 20 கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்க இந்தியா தேர்வாகி உள்ளது. இதை பற்றி ஆலோசனை செய்ய நேற்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது.

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் எம்பி திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு காரணமாக எடப்பாடி பழனிசாமி சந்தோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பேட்டி

பேட்டி

இந்த நிகழ்விற்கு எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி அழைக்கப்பட்டது ஏன்? கூட்டணி திட்டங்கள் என்னென்ன என்று ரவீந்திரன் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கேள்வி: டெல்லியில் நடைபெற்ற ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி அழைக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: எடப்பாடி வேணும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். ஆனால் எடப்பாடி மட்டும் போதும் என்று பாஜக நினைக்கவில்லை. எடப்பாடி கழற்றிவிட்டு செல்வதில் மாஸ்டர். அவர் எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிட்டுவிட்டு செல்வார். அது பாஜகவிற்கும் தெரியும். மோடியை எடப்பாடி ஒரு காலத்தில் கழற்றிவிடுவார். அதுதான் என் கருத்து. எடப்பாடி மீது மோடிக்கு சந்தேகம் இருக்கிறது. நம்மை கழற்றிவிட்டுவிடுவார் என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் எடப்பாடியை காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளும் கூட்டணிக்கு சேர்த்துக்கொள்ளாது. இதனால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு எடப்பாடி வந்துதான் ஆக வேண்டும்.

எடப்பாடி அரசியல்

எடப்பாடி அரசியல்

கோவை சம்பவத்தில் எதுவுமே பேசாமல் இருந்தவர்தான் எடப்பாடி. திருமாவளவன், காங்கிரஸ் போன்றவர்கள் எடப்பாடியிடம் கூட்டணிக்கு நோ சொல்லவிட்டனர். அதன்பின்புதான் கோவை விவகாரத்தில் திடீரென எடப்பாடி குரல் கொடுக்கிறார். இதன் அர்த்தம் என்ன? அவர் அரசியல் செய்கிறார். தேவைக்கு ஏற்றபடி மாறுகிறார் என்பதுதான் இதன் அர்த்தம். இப்போது பாஜக எடப்பாடியை அழைத்ததும் அரசியல்தான். ஆனால் எடப்பாடி மட்டுமே போதும் என்று கண்டிப்பாக பாஜக நினைக்காது. பாஜக குஜராத்தில் மிகப்பெரிய வெற்றிபெற போகிறது.

ஓபிஎஸ் குஜராத்

ஓபிஎஸ் குஜராத்

அப்படி வெற்றிபெற்று ஒருவேளை பதவி ஏற்பு விழாவிற்கு பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது என்றால்? அமித் ஷா ஒருவேளை பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்தால் என்ன செய்வீர்கள்? பன்னீர்செல்வம் முக்கியமான தலைவர்.. அவர் முன்னாள் முதல்வர் என்று அழைப்பு விடுத்தால் என்ன செய்வீர்கள்? இப்போதும் கூட பாஜகவிற்கு முழு ஆதரவு டிடிவி தினகரன் கொடுக்கிறார், ஓபிஎஸ், வைத்தியலிங்கம், அன்புமணி ஆகியோரும் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி எல்லோரையும் ஒதுக்கிவிட்டு ஸ்டாலினுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று பார்க்கிறார். ஓபிஎஸ், அன்புமணி என்று எல்லோரையும் ஒதுக்கிவிட்டு, ஸ்டாலினுக்கு எதிராக நான் நிற்க வேண்டும். 30 சதவிகித வாக்குகள் தனக்கு விழ வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அவருக்கு 15% வாக்குகள் மட்டுமே உள்ளது என்பது அவருக்கு தெரியவில்லை. எடப்பாடியின் உயரம் அவருக்கு தெரியவில்லை. 2024ல் அவருக்கு இது தெரியும்.

கொங்கு வெற்றி காரணம்

கொங்கு வெற்றி காரணம்

கேள்வி: இபிஎஸ் தலைமையை ஏற்றுக்கொண்டால் ஓ பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொள்ள தயார்.. கொங்கில் 100 சதவிகிதம் வெற்றியை பதிவு செய்தோம்.. அதற்கு எடப்பாடிதான் காரணம் என்று ஆர்பி உதயகுமார் கூறி உள்ளாரே?

பதில்: கொங்கு என்றால் வெள்ளாள கவுண்டர்தான் என்று எடப்பாடி நினைத்துக்கொண்டு இருக்கிறார். கொங்கில் பல ஜாதிகள் இருக்கின்றன. கொங்கு நாடார்கள், அருந்ததியர்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாயுடுகள், குறும்புக கவுண்டர்கள் போன்ற ஜாதிகளுக்கு எடப்பாடி தரப்பு முக்கியத்துவம் தருவது இல்லை. அவர்கள் நினைத்தால் எடப்பாடி கொங்கில் ஜெயிக்க முடியாது. அதற்கான பாடத்தை எடப்பாடிக்கு அவர்கள் எடுப்பார்கள். எடப்பாடிக்கு 15 சதவிகித்திற்கு மேல் வாக்கு வாங்கி இல்லை. அதை மக்கள் நிறுத்தி காட்டுவார்கள்.

யாருக்கு ஆதரவு

யாருக்கு ஆதரவு

கேள்வி: அதிமுகவில் பிரிந்து இருக்கும் எல்லோரும் சேர வேண்டும் என்று வைத்தியலிங்கம் கூறுகிறாரே?

பதில்: ஆம் தனி தனியாக நின்றால் வாக்குகள் பிரியும். இபிஎஸ் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர் இல்லாமல் கூட்டணி உருவாகும். தனது வாக்கு வங்கியை உணர்ந்து கொண்டு எடப்பாடி இறங்கி வர வேண்டும். எடப்பாடி பெரிய ஆள்தான். ஆனால் அவர் 30 % வாக்குகள் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டார். கொங்கு வேளாள கவுண்டர்கள் வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு எடப்பாடி வென்றுவிடலாம் என்று நினைக்க கூடாது. அவர் இறங்கி வர வேண்டும். கோவையில் எடப்பாடி ஜெயிக்கவே பன்னீர்செல்வம்தான் காரணம். ஓ பன்னீர்செல்வம் மீது கொங்கில் வெள்ளாள கவுண்டர்கள் அல்லாமல் மற்ற ஜாதியினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால்தான் சட்டசபை தேர்தலில் கொங்கில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. ஓ பன்னீர்செல்வம் இல்லை என்றால் கொங்கில் அதிமுகவிற்கு அவ்வளவு இடம் வந்திருக்காது. கொங்கில் மற்ற ஜாதி இல்லை என்று எடப்பாடி நினைப்பது தவறு. அதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+