மோடி வெற்றி பெற்றிருக்கிறார்.. ஆனால் இந்தியா தோற்றுவிட்டது.. தமிழக காங்கிரஸ்!
சென்னை: மக்களவை தேர்தல் முடிவின்படி மோடி வெற்றி பெற்று விட்டார் ஆனால் இந்தியா தோற்றுவிட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கான மக்களவைத் தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெற்றுள்ளது. பல மாநிலங்களில் பாஜக காங்கிரஸை விரட்டியடித்துள்ளது.
பாஜகவின் வெற்றி எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் மோசமாக உள்ளது.

காங்கிரஸ் தோல்வி
காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அமேதி தொகுதியிலேயே அக்கட்சியின் தலைவரான ராகுல்காந்தி தோல்வியடைந்துள்ளார். மேலும் பல தொகுதிகளிலும் காங்கிரஸின் நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியை சந்திதுள்ளனர்.

இந்தியா தோற்றுவிட்டது
கடந்த தேர்தலை காட்டிலும் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடியின் வெற்றி குறித்து பேசிய அவர், மோடி வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் இந்தியா தோற்றுவிட்டது என்றார்.

மனதிற்கு வருத்தம்
மேலும் தவறான கொள்கைக்கு மக்கள் வாக்களித்திருப்பது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. ஜனநாயகத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானதுதான்.

அச்சமாக உள்ளது
தவறான மனிதர்கள் வெற்றி பெறலாம். ஆனால் தவறான கொள்கை வெற்றிபெற கூடாது. இந்த கொள்கைதான் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போகிறது. இதனால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பணநாயகம்
எங்களின் உண்மையான வெற்றி தேனியில்தான் உள்ளது. தேனியில் பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போட்டி. தமிழகத்தின் வெற்றி மகத்தானது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.

தண்டனை
அதிமுக தவறான சித்தாந்தத்தின் அடிப்படையில் பாஜகவுடன் சென்றது, பாமகவும் பாஜகவுடன் சென்றது அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

காங்கிரஸ் பாடுபடும்
தமிழக மக்களின் உரிமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடும். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications