நம்பிக்கை! பேராசிரியர் ஜவாஹிருல்லா முன்பு காலை தூக்கி செல்பி எடுக்கும் 15 வயது சிறுவன்.. யார் இவர்?
சென்னை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் ஒருவர் காலால் செல்பி எடுத்துள்ளார். யார் அவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேரளா, கோழிக்கோடு மாவட்டம் வெளி மண்ணை கிராமத்தில் வசிக்கும் ஷஹீத் ஜம்ஷீரா தம்பதியரின் மூத்த மகன் ஆசீம். இவருக்கு பிறவியிலேயே இரு கைகளும் கிடையாது.
கேள்வித் திறன், பேசும் திறன் உள்ளிட்ட குறைபாடுகளுடன் நடப்பதற்கே சிரமப்படும் 90 சதவீத குறைபாடுகளை கொண்டு மாற்றுத் திறனாளி. இவருக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது. வெளிமண்ணை பவுண்டேஷன் எனும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்பட்டு வரும் அமைப்பு ஊக்கம் அளித்தது.

ஏற்கெனவே கேரளா அரசின் பால புரஸ்கார் விருது, யுனிசெப் அமைப்பின் கலாம் பவுண்டேஷன் வழங்கிய விருது உள்ளிட்டவைகளை ஆசீம் பெற்றுள்ளார். சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு 39 நாடுகளைச் சேர்ந்த 169 பேர் அடங்கிய பட்டியலில் இருந்து இறுதி மூவரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு 2022 ஆம் ஆண்டு கவுரவிக்கப்பட்டவர்.
இப்படி பல்வேறு திறமைகளை கொண்ட ஆசீம் சென்னை மண்ணடியில் இருக்கும் தமுமுக தலைமையகத்தில் மனிதநேய மக்கள் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஜவாஹிருல்லாவுடன் தனது காலாலேயே செல்ஃபி எடுத்துக் கொண்டார் ஆசீம்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவராக உள்ளவர் ஜவாஹிருல்லா. இவர் 1985 ஆம் ஆண்டு முதல் கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து 1996ஆம் ஆண்டு தமுமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் சார்பில் போட்டியிட்டு வென்றார்.

ஆசீம் தற்போது 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நீச்சல் பயிற்சியில் ஆர்வம் இருந்ததால் அலுவா ரயில்வே பாலத்தில் இவருக்கு ஷாஜி வலசேரில் என்பவர் பயிற்சி கொடுத்தார். கோழிக்கோட்டிலிருந்து பெரியாறு வரை நீந்தி சாதனை படைத்தார். இரு வாரங்களில் நீச்சலை பயின்றாராம். தனது பயிற்சியாளர் ஷாஜியின் வீட்டிலேயே இவர் தங்கியிருந்தார். ஷாஜி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சியை கற்றுக் கொடுத்து வருகிறார். இதுவரை 5000 பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அது போல் 1000 பேர் பெரியாற்றை நீச்சலடித்து கடந்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications