மோனாலிசா இஸ் மிஸ்ஸிங்.. அன்று இதே நாள்! மோனலிசா ஓவியத்தை திருடினாரே வின்சென்ட்? நின்று பேசும் வரலாறு
சென்னை: புன்னகை மட்டுமல்ல, மோனலிசா ஓவியமே ஒரு மர்மம்தான்.. உலகப்புகழ்பெற்ற அழியா படைப்பான இந்த மோனலிசா ஓவியத்தை, லியோனார்டோ டா வின்சி தன்னுடைய கைவண்ணத்தில் உருவாக்கினார்.. சின்னஞ்சிறு புன்னகையில் ஓராயிரம் ரகசியங்களை ஒளித்தி வைத்திருக்கும் மோனலிசாவின் மறுபக்கம் ஏராளம்.. இன்றைய தினம் ஆகஸ்ட் 21ம்தேதிக்கும், மோனலிசா ஓவியத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று உள்ளது. அது என்ன தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
ஒருபக்கம் சோகமும், மறுபக்கம் மகிழ்ச்சியும் தவழ காணப்படும் ஓவியம்தான் மோனலிசா.. பார்க்கும் பார்வையாளர்களுக்கு அருகில் இருப்பதுபோல தோன்ற செய்யும் மற்றொரு சிறப்பம்தான் மோனலிசா. முகம், பின்னணி, ஒளி, நிழல்கள் போன்றவற்றை ஒருங்கே இணைக்கும் ஒருமைப்பட்டின் சின்னம்தான் மோனலிசா.

நிதானமும் கவனமும்
இந்த மோனலிசா ஓவியத்தை லியோனார்டோ டா வின்சி வரைவதற்கு கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆயிற்றாம்.. அதாவது1503 மற்றும் 1519ம் வருடங்களுக்கு இடையில், மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் இந்த ஓவியத்தை வரைந்தாராம்.
பழமையான நுட்பங்களுடன், மங்கலான நிறங்களை சேர்த்து குழைத்து ஆயில பெயிண்ட்டிங்கில் வரைந்துள்ளார்.. பொப்லார் பலகையில் இந்த ஓவியத்தை வரைந்தாராம்.. மோனாலிசா ஓவியத்திற்கு லா ஜியோகொண்டா ஓவியம் என்று இன்னொரு பெயரும் உண்டு..
இந்த ஓவியத்தை பார்ப்பதற்கு, இத்தாலிய வம்சத்தைச் சேர்ந்த லிசா ஜியோ காண்டா என்ற பெண்மணியை போல இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.. அதாவது, பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினி அச்சுஅசல் இந்த மோனலிசா போலவே இருப்பாராம்.. ஆனால், மேலும் சிலர் அது கற்பனையான தெய்வத்தை போல இருப்பதாக சொல்கிறார்கள்.
இன்றைய ஆகஸ்ட் 21ம்தேதி,
பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் மோனலிசா ஓவியம் வைக்கப்பட்டிருந்தபோது, ஒருமுறை திருடப்பட்டுவிட்டது.. அன்று இதே ஆகஸ்ட் 21ம்தேதிதான் மோனாலிசா ஓவியம் திருடப்பட்டது. இந்த ஓவியத்தை திருடியவர் யார்? ஏன் திருடினார்? என்பதற்கான காரணங்கள் மிகவும் சுவாரஸ்யமானது.
மியூசியத்திலிருந்து மோனலிசா ஓவியத்தை திருடி சென்றது குறித்து யாருக்குமே அன்றைய தினம் தெரியவில்லை.. மறுநாள் ஆகஸ்ட் 22ம்தேதிதான் லூவர் மியூசியத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், மோனாலிசா ஓவியத்தை காணவில்லை என்பதை யதேச்சையாக பார்த்தார்.. உடனே அந்த ஊழியர் போலீசுக்கு தகவல் தந்தார்..
போலீஸ் அதிகாரியும், மோனாலிசா ஓவியத்தை, அருங்காட்சியகத்தில் விளம்பரத்துக்காக படம் எடுக்க கொண்டு சென்றிருக்கலாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.. மோனாலிசா ஓவியம் உண்மையிலேயே திருடு போனதா? என்றுகூட அந்த போலீஸ் அக்கறை காட்டவில்லை.
திருடப்பட்ட ஓவியம்
ஆனாலும் அந்த ஊழியருக்கு, ஓவியம் இல்லாதது மனதை போட்டு அரித்தது.. அதனால், போலீஸ்காரர் சொன்னபடியே, ஓவியங்களை படம் எடுக்கும் இடங்களுக்கு நேரடியாகவே சென்று, மோனலிசா ஓவியம் இருக்கிறதா? என்று விசாரித்தார்.. அங்கிருப்பவர்கள் யாருமே, ஓவியத்தை தாங்கள் கொண்டுவரவில்லையே என்றார்.. அதற்கு பிறகுதான், அலறியடித்து கொண்டு, பாரீஸ் போலீசுக்கு தகவல் தந்தார் அந்த ஊழியர்.
உடனே 60-க்கும் மேற்பட்ட போலீஸ் டீம், மியூசியத்துக்குள் நுழைந்தது.. அங்கிருந்த அனைத்து ஊழியர்களிடமும் விசாரணையை ஆரம்பித்தது.. மொத்தம் 45 ஏக்கர் பரப்பில் அந்த மியூசம் இருந்ததால், அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு தேடியது..
அப்போதுதான், மோனாலிசா ஓவியத்தின்மீது பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியும், மரச்சட்டங்களும் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் கிடப்பதை கண்டனர்.. ஓவியத்தை மட்டுமே யாரோ திருடி சென்றது உறுதியானது.. ஆனால் யார் திருடியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை..
21.08.1911-ல் செய்தி தாள்களில் மோனாலிசா இஸ் மிஸ்ஸிங் என்று தலைப்பு செய்தியாக வெளியானது..
ஒரு வாரம் விடுமுறை
மோனாலிசா ஓவியம் திருடப்பட்டுவிட்டது என்ற செய்தியை கேட்டதுமே, ஓவியம் மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தை பார்ப்பதற்காக பலரும் மியூசியத்தில் குவிந்துவிட்டார்களாம்.. பிறகு ஓவியம் திருட்டை விசாரிப்பதற்காக மியூசியத்திற்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டதாம்.
கலைஞர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் என அத்தனை பேரும் போலீசாரின் சந்தேக வளையத்துக்குள் வந்தனர்.. இதில் ஸ்பானிஷ் ஓவியர் பாப்லோ பிக்காசோவும் விசாரணைக்கு ஆளானார்.. காரணம், அவரது நண்பர்களில் ஒருவர் லூவரிலிருந்து திருடப்பட்ட பொருட்களுடன் தொடர்புடையவர் என்பதால், அந்த நேரத்தில் கலைத் திருட்டுகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
ஆதாரம் கிடைக்கவேயில்லை
அதனால் பிக்காசோ மீதும் போலீசாருக்கு சந்தேகம் வந்தது.. ஆனால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால், மோனாலிசா திருட்டில் இருந்து அவர் விரைவில் விடுவிக்கப்பட்டார். பிறகு, நவீன கலைஞர்களின் துணிச்சலான செயலாக இந்த திருட்டு இருக்கலாம் என்று ஊகித்தனர்.. பணக்கார சேகரிப்பாளர்கள் அல்லது வெளிநாட்டு அரசாங்கங்கள் இதில் ஈடுபடலாம் என்று சிலர் கற்பனைகளை அவிழ்த்து விட்டனர்..
இப்படி விசாரணை வளையங்கள் பெரிதாகி கொண்டே வந்தாலும் ஓவியம் கிடைத்தபாடில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 1913ம் ஆண்டு, இத்தாலி வாட்டில் உள்ள புளோரஜிஸ் நகரில், கலைப்பொருட்களை ஒரு நபர் விற்றுக் கொண்டிருந்தார்.. அந்த நபரிடம் ஒருவர், மோனாலிசா ஓவியத்தை கொண்டு வந்து விற்க முயன்றார்.. அப்போதுதான், ஓவியத்தை திருடிய நபர் வசமாக போலீசில் சிக்கிக் கொண்டார்..
அந்த நபரின் பெயர் வின்சென்ட் பெருஜ்ஜியா.. இவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்.. லூவூர் மியூசியத்தில் வேலை பார்த்தவரும்கூட.. அதாவது மோனாலிசா ஓவியத்துக்கு கண்ணாடி சட்டம் போடும் பொறுப்பை, வின்சென்ட்டிடம்தான் அன்று தந்தனர்..
பதுங்கி கொண்ட வின்சென்ட்
முதல்நாள் மியூசியத்தில் வேலை பார்த்தபோதே, மோனாலிசா ஓவியம் மாட்டப்பட்டிருந்த இடத்துக்கு அருகில், பொருட்களை போட்டு வைத்திருக்கும் அறையில் யாருக்கும் தெரியாமல் பதுங்கி கொண்டான் இந்த வின்சென்ட்..
மறுநாள் காலையில் 7 மணிக்கு, மோனாலிசா ஓவியத்தை கழட்டிஎடுத்து, தன்னுடைய நீளமான அங்கியினுள் மறைத்து வைத்து கொண்டார்.. பிறகு செக்யூரிட்டிகள் யாருமில்லாத நேரம் பார்த்து, ஒரு பெட்டியில் ஓவியத்தை மறைத்து வைத்து கொண்டு, பிறகு மியூசத்திலிருந்து வெளியேறியது விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், ஓவியத்தை வின்சென்ட் திருட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், பிரதான காரணம் உரிமைதான் என்கிறார்கள்..
இத்தாலிக்கு சொந்தமான ஓவியம்
ஓவியத்தை வரைந்த டாவின்சி இத்தாலி நாட்டுக்காரர்.. எனவே அவர் வரைந்த ஓவியமும் இத்தாலிக்கு சொந்தமானது என்று வின்சென்ட் நம்பினார்.. தங்கள் நாட்டுக்கு சொந்தமான ஓவியம், இன்னொரு நாட்டு மியூசியத்தில் வைத்திருப்பதை வின்சென்ட் விரும்பவில்லை.. இத்தாலிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மோனலிசா கருதப்பட்டதால், அதை இத்தாலிக்கு கொண்டு செல்ல விரும்பினாராம்.
இப்படி மோனாலிசா ஓவியத்தை தன்னுடைய நாட்டுக்கு கொண்டு வருவதை அங்கீககாரமாகவும், வெகுமதியாகவும் நினைத்தார்.. தன்னுடைய நாட்டிற்கு ஒரு சேவையை செய்வதாக நினைத்தார். ஆனால்,மோனாலிசாவை திருடி சென்றபிறகுதான், அது உலகளவில் மேலும் பிரபலமாக்கியது, அதன் புகழையும் பன்மடங்காக்கியது..
திருடப்பட்டு 2 ஆண்டுகளிலேயே ஓவியம் திரும்பவும் கிடைத்துவிட்டது.. ஏதோ தங்களது வீட்டிலிருந்த பொருள் காணாமல் போய் மறுபடியும் கிடைத்ததுபோன்ற சந்தோஷத்தை மக்கள் முகங்களில் காண முடிந்தது..
இப்படி பல சிக்கல்கள், பரபரப்புகள், மர்மங்களை கடந்து மோனலிசா ஓவியம் இன்றும் கூட உலக மக்களால் மதிக்கப்படும் ஓவியமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது...!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications