மாத சம்பளம் 30000 வாங்குவர்களுக்கு.. வெறும் 15 வருடத்தில் ஒரு கோடி கிடைக்கும்.. என்ன செய்ய வேண்டும்?
சென்னை: நம்மில் பலருக்கும் "ஒரு கோடி ரூபாய்" என்பது எட்டாக்கனியாகவே இன்று வரை இருந்து வருகிறது. ஆனால், சரியான நிதி மேலாண்மை மற்றும் முறையான முதலீட்டுத் திட்டத்தைப் பின்பற்றினால், குறிப்பாக நிதி ஒழுக்கம் இருந்ததால், மாதம் 30,000 ரூபாய் சம்பாதித்தால் கூட அடுத்த 15 முதல் 18 ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரர் ஆக முடியும் என நிதி ஆலோசகர்கள் வழிகாட்டுகிறார்கள். அது பற்றி பார்ப்போம்.
சம்பாதிக்கும் பணத்தை மொத்தமாக சேர்த்து வைப்பது என்பது யாருக்குமே சாத்தியமில்லை. அதேநேரம் சரியான நிதி ஒழுக்கத்துடன், சிறுக சிறுக சேமித்து பழகினால் ஒரு நாளில் கோடீஸ்வரர் ஆகிவிடும். வருமானத்தில் மாதம் வெறும் ஆயிரம் சேமிப்பவர்கள் தொடங்கி, 50000, 5லட்சம் சேமிப்பவர்கள் வரை எல்லாருமே பின்பற்றுவது நிதி ஒழுக்கம்.

கையில் காசு வந்த உடன் என்னென்ன செலவு, என்னென்ன சேமிப்பு, என்னென்ன கடன் என்பதை வரையறை செய்து வாழ வேண்டும். கையில் பணம் வந்துவிடும் என்று நினைத்து ஆடம்பரமாக வாழ்ந்தால் கடனாளியாகவே வாழ்க்கை முடியும். வெறும் 15000 சம்பளம் வாங்கும் தம்பதிகள், ஒரு கோடி இலக்கை எட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா.. உண்மை தான்.. மாதம் 15000 சம்பளம் வாங்கும் தம்பதிகள் கையில் மாதம் 30000 இருக்கும். அதனை எப்படி ஒரு கோடியாக மாற்றுவது என்பது குறித்து நிதி நிபுணர்கள் கூறிய விஷயங்களை எளிமையாக பார்ப்போம்.
நிதி நிபுணர்கள் முன்வைக்கும் '3-அடுக்கு' வியூகம் பற்றி பார்ப்போம்.
1. 50:30:20 விதியை உடைத்தல்: பொதுவாக 20% சேமிக்கச் சொல்லும் விதியை மாற்றி, 30,000 ரூபாய் சம்பளத்தில் குறைந்தபட்சம் 35% முதல் 40% (சுமார் ₹12,000) வரை முதலீடு செய்ய வேண்டும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பதே இந்த இலக்கின் முதல் படியாகும். எப்படி சார். ஸ்கூல் பீஸ், வாடகை, கரெண்ட் பில், மளிகை செலவு என்று யோசிக்கிறீர்களா.. வாடகை, குடும்ப செலவு எல்லாம் சேர்த்து 18000த்தில் முடிப்பது உங்கள் சாமர்த்தியம். அதனை செய்தால் எளிதாக இலக்கை எட்ட முடியும்.
2. ஸ்டெப்-அப் எஸ்.ஐ.பி (Step-up SIP) - அசுர வேகம்: வெறும் சமமான முதலீட்டை விட, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமான உயர்விற்கு ஏற்ப முதலீட்டை 10% முதல் 15% வரை அதிகரிக்க வேண்டும். கணக்கீடு: மாதம் ₹12,000 ஆரம்பித்து, ஆண்டுக்கு 10% முதலீட்டை உயர்த்தினால், 15% சராசரி வருவாயில் 15-16 ஆண்டுகளில் ₹1 கோடியை மிக எளிதாக எட்டிவிடமுடீயும்
3. முதலீட்டு கலவை: பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கிலோ அல்லது வெறும் தங்கத்திலோ மட்டும் முடக்காமல், பணவீக்கத்தை முறியடிக்கும் Equity Mutual Funds (Mid-cap & Small-cap) மற்றும் Index Funds-களில் பிரித்து முதலீடு செய்வது அவசியம் ஆகும்,
சந்தை ஏற்ற இறக்கங்களைக் கண்டு அஞ்சாமல், நீண்ட கால அடிப்படையில் முதலீட்டைத் தொடர்வது மட்டுமே இந்த இலக்கை அடைய உதவும். இடையில் பணத்தை எடுப்பது கூட்டு வட்டியின் பலனைக் குறைத்துவிடும். "சிறிய துளி பெருவெள்ளம் என்பது போல, இன்றைய உங்கள் 12,000 ரூபாய் சேமிப்பு, நாளைய உங்களை ஒரு கோடிக்கு அதிபதியாக்கும்" என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
முதல் 10 ஆண்டுகளில் உங்கள் பணம் ₹45 லட்சமாக மெதுவாகத்தான் வளரும். ஆனால் அடுத்த வெறும் 5 ஆண்டுகளில் அது ₹45 லட்சத்திலிருந்து ₹1.18 கோடியாக (கிட்டத்தட்ட மூன்று மடங்கு) உயரும். இதுதான் கூட்டு வட்டியின் மேஜிக்.
வருடாந்திர உயர்வு : ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சம்பளம் உயரும்போது, முதலீட்டை ₹1,200 மட்டும் அதிகரியுங்கள் (10% Step-up). இது உங்கள் இலக்கை பல ஆண்டுகள் முன்னதாகவே அடைய உதவும்.
முதலீட்டுத் தேர்வு: ₹12,000 தொகையை இப்படிப் பிரிக்கலாம்:
Index Fund (பாதுகாப்பிற்கு): ₹5,000
Mid-Cap Fund (வளர்ச்சிக்கு): ₹4,000
Small-Cap Fund (அதிவேக வருமானத்திற்கு): ₹3,000 இப்படி பிரித்து முதலீடு செய்தால் ஒரு கோடி இலக்கை அடைய முடியும்.
இன்னும் தெளிவாக சொல்வது என்றால், 'ஸ்டெப்-அப் எஸ்.ஐ.பி' முறைப்படி, நீங்கள் முதல் மாதத்தில் 12,000 ரூபாய் முதலீட்டைத் தொடங்க வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சம்பளம் உயர்வதற்கு ஏற்ப, முதலீட்டுத் தொகையையும் வெறும் 10 சதவீதம் மட்டும் அதிகமாக்க வேண்டும். அதாவது, முதல் ஆண்டு மாதம் 12,000 என்றால், இரண்டாம் ஆண்டு மாதம் 13,200 என உங்கள் முதலீட்டை உயர்த்திக்கொண்டே செல்ல வேண்டும்.
இந்த முதலீட்டிற்கு ஆண்டுக்கு சராசரியாக 15 சதவீத வருமானம் கிடைப்பதாகக் கணக்கிட்டால், முதல் ஐந்து ஆண்டுகளில் உங்கள் சேமிப்பு 13.50 லட்சம் ரூபாயைத் தொடும். பத்தாவது ஆண்டின் இறுதியில் இது சுமார் 45 லட்சம் ரூபாயாக உயரும். இங்கிருந்துதான் 'கூட்டு வட்டியின்' அற்புதம் தொடங்கும். அடுத்த வெறும் ஐந்து ஆண்டுகளில், அதாவது 15-வது ஆண்டின் இறுதியில், உங்கள் முதலீட்டு மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 கோடியே 18 லட்சம் ரூபாயாக அசுர வளர்ச்சி அடைந்துவிடும்.
இந்த ஒரு கோடி ரூபாய் இலக்கை எட்டுவதற்கு நீங்கள் முதலீடு செய்யும் மொத்தத் தொகை சுமார் 45.70 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், சரியான நேரத்தில் முதலீட்டைத் தொடங்கி, இடையில் நிறுத்தாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் மட்டும் சுமார் 72 லட்சம் ரூபாய் கிடைக்கும். எந்த காரணம் கொண்டும் இடையில், இடையில் பணத்தை எடுக்கவே கூடாது. பணத்தை எடுத்தால் கூட்டு வட்டியின்மேஜிக்கை பார்க்க முடியாமல் போய்விடும்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications