28 வயதில் எம்.பி! 31 வயதில் மத்திய இணை அமைச்சர்! வெங்கடேச பண்ணையார் மனைவி ராதிகா செல்வியின் அரசியல்!
சென்னை: மூலக்கரை வெங்கடேச பண்ணையார் மனைவியும், முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சருமான ராதிகா செல்வி பற்றித்தான் இன்றைய Throwback stories வரிசையில் பார்க்க இருக்கிறோம்.
கர்ப்பிணி பெண்ணாக கனவனை என்கவுண்டருக்கு பறிகொடுத்து கதறி துடித்தது, கைக்குழந்தையுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தது, 28 வயதில் எம்.பி.யானது, 31 வயதில் மத்திய இணை அமைச்சரானது என ராதிகா செல்வியை பற்றி கூறினால் ஏராளமாக கூறலாம்.
ராதிகா செல்வி நினைத்திருந்தால் திமுகவில் பல முக்கியப் பதவிகளை பெற்று முன்னணி பிரமுகராக வலம் வந்திருக்கலாம். ஆனால் அவரோ அரசியலே வேண்டாம் என்ற முடிவோடு ஒதுங்கிவிட்டார்.

மூலக்கரை வெங்கடேச பண்ணையார்
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை வெங்கடேச பண்ணையாரின் மனைவியான ராதிகா செல்வி சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். வெங்கடேச பண்ணையாருக்கு ஆபத்துக்களும், எதிர்ப்புகளும் அதிகம் இருப்பதை அறிந்தும் அவரை விரும்பி திருமணம் செய்துகொண்டவர் ராதிகா செல்வி. இவர் 6 மாத கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் வெங்கடேச பண்ணையார் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சென்னையில் வைத்து காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்படுகிறார். வெங்கடேச பண்ணையாரின் உடல் வைக்கப்பட்டிருந்த கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கணவனின் குண்டு துளைத்த உடலை கண்டு கர்ப்பிணியான ராதிகா செல்வி கதறித் துடிக்கிறார்.

நாடார் சமுதாயம்
இந்த நிகழ்வு ஒட்டுமொத்த நாடார் சமுதாய மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்குகிறது. அதிமுக ஆட்சிக்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் தென் மாவட்டங்களில் கொந்தளிப்பு குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இதனிடையே 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்விக்கு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்புக் கொடுக்கிறார் கருணாநிதி.(அன்றைய திருச்செந்தூர் தொகுதி தான் தொகுதி மறுசீரமைப்பு படி தூத்துக்குடியாக மாறியது.) 28 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக அதுவும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெறுகிறார் ராதிகா செல்வி.

மத்திய உள்துறை இணை அமைச்சர்
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா செல்வியின் செயல்பாடுகள் குறை கூற முடியாத அளவுக்கு இருந்ததால், 2007ஆம் ஆண்டு மத்திய இணை அமைச்சராகும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதுவும் உள்துறைக்கு இணை அமைச்சர் என்றால் சும்மாவா. 31 வயதில் மத்திய உள்துறை இணை அமைச்சராக மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார். அப்போது வெங்கடேச பண்ணையார் குறித்த நெகட்டிவ் பிம்பத்தை சுட்டிக்காட்டி அவரது மனைவிக்கு மத்திய இணை அமைச்சர் பதவியா என ஆங்கில ஊடகங்கள் பரபரப்பாக பேசின.

கூலாக எதிர்கொண்டார்
இதனை மிகவும் கூலாக எதிர்கொண்ட ராதிகா செல்வி 2 ஆண்டுகள் முழுமையாக மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்தார். எந்தக் காவல்துறையினர் ராதிகா செல்வியின் கணவரை என்கவுண்டர் செய்தார்களோ அதே காவல்துறையினர் ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சரான பிறகு அவருக்கு சல்யூட் அடிக்க வேண்டிய சூழலை உருவாக்கினார் கருணாநிதி. இது தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு உதாரணமோ என தோன்ற வைத்தது.

அரசியலில் பிடிப்பு இல்லை
திமுகவில் நாடார் சமுதாய பிரதிநிதியாக கிடுகிடுவென வளர்ந்து வந்த ராதிகா செல்வி, ஒரு கட்டத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். ராதிகா செல்வி மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த போது ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications