காலை 8 டூ இரவு 1.30.. பக்கா பிளானோடு வந்த ஈடி! செந்தில் பாலாஜி கைதுக்கு முன் அந்த நொடி நடந்தது என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்தது தொடங்கி அவர் கைது செய்யப்பட்டது வரை நடந்தது என்ன என்பது தொடர்பாக இந்த செய்தியில் பார்க்கலாம். நேற்று காலை 8 மணி அளவில் தொடங்கிய ரெய்டு அதிகாலை 1.30 மணி அளவில் கைதோடு முடிந்தது.
சமீபத்தில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இந்தியாவில் நடந்த பெரிய ரெய்டுகளில் ஒன்றாக.. நீண்ட ரெய்டுகளில் ஒன்றாக இந்த ரெய்டுகள் பார்க்கப்பட்டன. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்தது. முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது.ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் யாரையும் விட்டு வைக்காமல் வருமான வரித்துறையினர் தீவிரமாக ரெய்டு மேற்கொண்டது. அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரருமான சங்கரானந்தா வீட்டிலும், அலுவலகத்திலும் ரெய்டு மேற்கொண்டது. அந்த ரெய்டில் கைப்பற்ற ஆவணங்கள் அடிப்படையில் நேற்று ரெய்டு நடந்தது.
நேற்று காலை 8 மணி: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.
காலை 9 மணி: அவரின் வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
காலை 9.30 மணி: போலீசுக்கு தெரிவிக்காமல் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டனர். கடந்த முறை போல இப்போது நடக்க கூடாது என்பதால் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டனர்.
பிற்பகல் 12: செந்தில் பாலாஜி வீடுகளில் மட்டும் ரெய்டு நடத்தியது போதாது என்று தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர்.
பிற்பகல் 2: சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு மத்திய அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டது. திடீரென அதிவிரைவுப்படை அங்கே குவிக்கப்பட்டு இருப்பதால் கடும் பதற்றம் ஏற்பட்டது.
இரவு 12 மணி: செந்தில் பாலாஜியின் கரூர் வீடுகளில் ரெய்டு முடிந்தது.
இரவு 12.30: தலைமை செயலகத்தில் ரெய்டு முடிந்தது. தலைமையின் செயலகத்தில் ரெய்டு முடித்து கிளம்பிய அதிகாரிகள் மீண்டும் சில நிமிடங்களில் மீண்டும் அங்கே வந்தனர் .தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் 10 மணி நேரமாக சோதனை நடந்த பின்பும் மீண்டும் வந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் உள்ள மூன்று கணினிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினர்.
இரவு 1 மணி: 17 மணி நேரங்களுக்கு பின் அவர் வீட்டில் சோதனைகள் முடிந்தது. செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இரவு 1.30: இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முகத்தை கையால் மூடிக்கொண்டு மற்றொரு கையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு செந்தில் பாலாஜி கடுமையாக சத்தம் போட்டார். அவர் சோகமாக அழுத காட்சிகளும் வெளியாகின. இதையடுத்து தற்போது அவர் ஓமந்தூரார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications