சூப்பர் திட்டம்.. முதலமைச்சரின் காலை உணவு.. ஊரக பகுதியில் விரிவாக்கம்.. ஸ்டாலின் அன்றே சொன்னாரே, செம
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அடுத்தக்கட்ட விரிவடைய உள்ளது.. இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டது... இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்த நிலையில், மாணவர்களின் வருகைப்பதிவும் அதிகரித்தது தெரியவந்தது. அதனால்தான், இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முதல்வர் முடிவு செய்தார்.. பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள 31,00 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணி தீவிரமானது.
கருணாநிதி: இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு, மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்திருந்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் துணை நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் பலமுறை நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
உணவுத்திட்டம்: இந்நிலையில், தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
அதாவது, தமிழகத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 2. 50 லட்சம் மாணவர்களுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பானது செயல்வடிவம் பெற்றுள்ளது.
மகிழ்ச்சி: இந்த திட்டத்திற்காக தனியாக உணவுப் பொருட்களை வைக்க, சமையல் செய்ய, தேவையான இட வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் திட்டத்தை செயல்படுத்த, முழு ஒத்துழைப்பு வழங்கும்படியும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்களாம். இதையடுத்து, ஊரகப்பகுதிகளிலும் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் ஆரம்பமாகியிருப்பது பெரு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications