Mosquito Net: சென்னை வடிநீர் கால்வாய்களில் கொசுவலை போர்த்தியது ஏன்? மேயர் பிரியா விளக்கம்
சென்னை: சென்னையில் கொசுக்களை ஒழிப்பதற்காக சில இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களுக்கு கொசுவலை போர்த்தியது பெரும் விமர்சனங்களுக்குள்ளான நிலையில் அது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
தண்ணீர், காற்று உள்ளிட்டவைகளால் நோய்கள் உண்டாகும் நிலையில் கொசுக்களாலும் பல கொடிய வைரஸ்கள் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. அதில் முக்கியமானவை டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா...

இந்த காய்ச்சல்கள் கொசுக் கடியால் ஏற்படுகிறது. தற்போது பேன், ஏசி இயங்கி கொண்டிருந்தாலும் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. கொசு வலை போட்டாலும் அதுக்குள்ளேயும் வந்து விடுகின்றன.
கொசுக்களை ஒழிக்க
கொசுக்களை ஒழிக்க விரட்டிகளை பயன்படுத்துவது சிலருக்கு மூச்சு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. என்னதான் வீட்டை சுற்றியிருக்கும் குப்பை கூலங்களை சுத்தப்படுத்தினாலும், மாலை 6 மணிக்குயானால் போதும் எப்படியாவது நமக்கு முன்னே உள்ளே சென்றுவிடுகின்றன.
இது போன்ற நோய்களை பரப்பும் கொசு கடியில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. பல இடங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சார்பில் கொசு மருந்து தெளித்தல், கொசு புகை போடுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை மாநகராட்சி
இந்த சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூர், திருவிக நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களுக்கு நூதன முறையில் கொசு தடுப்பான்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது வடிகால்களுக்கு கொசு வலை பொருத்தும் பணி நடந்து வருகிறது.
கொசுக்களை ஒழிக்க மழைநீர் வடிகால்களில் கொசு வலை போட்டால் போதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது செல்லூர் ராஜுவின் வைகை ஆற்றில் தெர்மாகோல் திட்டத்தை விட மிகவும் மோசமான யோசனை என கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
மழை நீர் வடிகால்
அதாவது சாலையில் மழையின் போது பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை வடிகால்வாயில் விழ செய்வதற்காக ஆங்காங்கே சிறிய அளவிலான தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளின் மூடியை திறந்து கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்படுகிறது.
மழைநீர் கால்வாய்க்குள் இருக்கும் கொசுக்கள் தொட்டியின் மூடியில் உள்ள துளை வழியே வெளியேறாமல் இருக்க இந்த நடவடிக்கை என சொல்லப்படுகிறது. இந்த கொலை வலை முயற்சியை அன்று தெர்மாக்கோல், இன்று கொசுவலை என சமூகவலைதளங்களில் நகைச்சுவையாக கருத்துகள் பரிமாறப்படுகின்றன.
கொசுவை பிடிக்க வலைவரிக்கும் மாநகராட்சி
அதிலும் கொசுவை பிடிக்க வலைவிரிக்கும் சென்னை மாநகராட்சி, கொசு உற்பத்தியை தடுக்க புதிய வழி நீங்க ஒரு சிட்டி விஞ்ஞானி (செல்லூர் ராஜுவை வில்லேஜ் விஞ்ஞானி என்றார்கள்), மதுரைக்கு தெர்மாக்கோல், சென்னைக்கு கொசுவலை என கிண்டல்கள் அதிகரித்துள்ளன.
அது போல் செந்தில், கவுண்டமணியின் காமெடியான "மீனுக்கு வலை போட்டால் வலைக்குள் என்ன இருக்கும், மான் இருக்கும். கொசுவுக்கு வலை போட்டா வலைக்குள் என்ன இருக்கும்" என்ற காமெடியையும் பதிவிட்டு வருகிறார்கள்.
மேயர் பிரியா விளக்கம்
இந்த நிலையில்தான் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அந்த கொசு வலை , கொசுக்களை ஒழிக்கும் நோக்கில் போடவில்லை. ஒரு கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று போட்டுள்ளார்கள். மற்றபடி இது மாநகராட்சியின் அறிவிப்பு கிடையாது. எனவே இதில் சர்ச்சையாக்கும் அளவுக்கு எந்த விஷயமும் இல்லை என பிரியா தெரிவித்தார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விடப் போகும் கூகுள்! பின்னணியில் மெகா ஸ்கெட்ச்! அமெரிக்கா அனுமதிக்குமா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications