பெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய தாய் - மகன் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

    சென்னை: பட்டப்பகலில்.. பெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. வீடியோ பார்த்து போலீசாரே அதிர்ந்துவிட்டனர்.. இப்போது தாய் - மகனை தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.

    சமீப காலமாக வளசரவாக்கம் பகுதிகளில் வீடுகளில் கொள்ளை போவதாக நிறைய புகார்கள் ஸ்டேஷனுக்கு வந்து கொண்டே இருந்தன. அதிலும் பூட்டிய வீட்டில் தான் நிறைய கொள்ளை நடப்பதாக செய்திகள் வந்தன.. இந்த தொடர் கொள்ளை சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார், தனிப்படைகள் அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராவில் ஆய்வு மேற்கொண்டனர்.

    Mother and son arrested in theft case

    அப்போதுதான் ஒரு பெண் அந்த கேமிராவில் தென்பட்டார். அவருடன் இளைஞரும் கூடவே வருகிறார். இருவரும் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைக்கிறார்கள்.. உள்ளே சென்று, நகை, பணத்தை திருடி கொண்டு இருவரும் வெளியே வருகிறார்கள்.

    வேறு வேறு பகுதிகளில் திருட்டு நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளிலும், இவர்கள் 2 பேர்தான் இருக்கிறார்கள்.. வீடு தவிர, பூட்டியிருக்கும் ஆபீசுக்குள்கூட இருவரும் போய் திருடி வருகிறார்கள். இவர்களை பற்றி போலீசார் விசாரித்ததில், தாய் - மகன் என்பது தெரியவந்தது.

    சாந்திக்கு 44 வயசு, மகன் நாகராஜ்-க்கு 20 வயசு.. வேலை கேட்டு வருவது போல் வந்து ஆபீஸ்களில் திருடுவது, அட்ரஸ் கேட்பது போல விசாரித்து, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவது, அதன் பிறகு பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளை அடிப்பது.. இப்படியே இவர்கள் காலத்தை ஓட்டி உள்ளனர்.

    அப்படி அங்குள்ள ஒரு ஆபீசில் வேலை கேட்பது போல் வந்து, தங்களது செல்போன் நம்பரை கொடுத்து விட்டு வந்தபோது தான் 2 பேரும் சிக்கி கொண்டுள்ளனர். சென்னை மட்டுமல்ல.. காரைக்குடி பகுதியில் இவர்களது கொள்ளை ஏராளம்.. இப்போதைக்கு 8 பவுன் நகைகள், ரூ.75 ஆயிரம் பணம் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாயும் - பிள்ளையும் இப்போது ஜெயிலில்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+