தாய் பத்திரம்.. மூலப்பத்திரம் மட்டும் போதுமே.. போலி பத்திரத்தை ஆன்லைனிலேயே கண்டுபிடிக்கலாம்.. பாருங்க
சென்னை: நாளுக்கு நாள் போலி பத்திரங்களை பயன்படுத்தி, மோசடிகள் பெருகிவரும் நிலையில், இவைகளை எளிதில் அடையாளம் காணுவது எப்படி தெரியுமா?
சொத்துக்கள் விற்பனையில், நிறைய மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இதற்காக, தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்கள் போலவே உருவாக்கி மோசடிகள் நடக்கின்றன. இதற்காகவே, புதிய நடைமுறை ஒன்று சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.

போலி பத்திரங்கள்: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்த நிலையில், இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா, சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது..
அதேபோல, பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
காரணம், சில இடங்களில் காலி நிலம் என்று சொல்லி, கட்டிடத்தை மறைத்து, பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்தது. அதனால்தான், காலி நிலங்களின் புகைப்படத்தை பத்திரத்தில் இணைக்க வேண்டும் என்றும், காலி நிலம் மட்டுமல்லாமல், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
எப்படி கண்டறிவது: எனினும், மோசடிகள் தொடரும்பட்சத்தில், போலி பத்திரங்களை எவ்வாறு அடையாளம் காணுவது தெரியுமா? பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை பயன்படுத்தி, சொத்து பதிவு செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நகல் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே, போலியை கண்டுபிடிக்கலாம்..
அதேபோல, முத்திரைத்தாள் வாங்கிய தேதி மற்றும் முதல் முத்திரைத்தாளின் பின் பக்கத்தில், தெரிவிக்கப்பட்டிருக்கும் பதிவு விவரங்கள் போன்றவற்றின் வித்தியாசங்களை வைத்தும் போலி பத்திரங்களை அடையாளம் காண முடியும். சொத்தின் மூலப்பத்திரங்கள் அதாவது தாய் பத்திரங்களை வைத்தும் ஓரளவு போலிகளை கண்டுபிடிக்கலாம்.
ஆன்லைன் முகவரி: இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஆன்லைன் மூலமாகவும், உங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.. http://ecview.tnreginet.net/ என்ற இந்த முகவரியை பயன்படுத்தி, உங்கள் நிலத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இந்த இணையதள முகவரியில், சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், பத்திரம் எண், பதிவு செய்த வருடம் ஆகிய 3 தகவல்களையும் பிழையின்றி பதிவு செய்தால் பத்திரம் குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும்.. அப்போது, அந்த பத்திரம் யார் பெயரில் இருக்கிறது? உங்களது நிலம் உங்கள் பெயரில் இருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் நேரடியாகவே அறிந்து கொள்ளலாம். https://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta_ta.html?lan=ta
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications