Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“உயிரோட அருமை தெரியுமா விஜய்?” தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட இளைஞரின் தாய் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய்க்கு பாதுகாவலர்களாக இருந்த பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட தவெக தொண்டர் சரத்குமாரின் தாய், விஜய்க்கு கேள்வி எழுப்பி வேதனையோடு பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர். தவெக மதுரை மாநாட்டில், 2500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Mother of TVK Cadre Expresses Anguish After Son Was Thrown Out by Vijay s Bouncers at Madurai Maanadu

தவெக மாநாடு - விஜய் ரேம்ப் வாக்

இந்த மாநாட்டில் பங்கேற்ற விஜய், தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வால்க் மேற்கொண்டார். அப்போது விஜய்யை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்கள் யாரும் ஏறிவிடக்கூடாது என இரும்புக்கம்பிகளில் கிரீஸ் தடவி இருந்தனர். ஆனாலும் அதனையும் மீறி விஜய் ராம்ப் வாக் சென்றபோது அவரது ரசிகர்கள், பவுன்சர்களையும் தாண்டி மேடையில் ஏறி விஜய் அருகே நெருங்கி வந்தனர்.

அவர்களை தடுத்த பவுன்சர்கள் குண்டுக்கட்டாக அவர்களை மேடையில் இருந்து தூக்கி எறிந்தனர். அப்போது ஒரு ரசிகர் கீழிருந்து ராம்ப் வாக் மேடையில் ஏறியபோது பவுன்சர் ஒருவர் அவரை அலேக்காக தூக்கி தரையில் எறிந்தார். இதில் காலில் முறிவு ஏற்பட்டு அந்த தொண்டர் துடிதுடித்துப் போனார். அதேபோல, இன்னொரு தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய நிலையில், அவர் பக்கவாட்டில் இருந்த கம்பியை பிடித்து தொங்கி பின்னர் மெதுவாக கீழே இறங்கினார்.

பெற்றோர் கண்ணீர்

இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரல் ஆனது. இதனை வீடியோவாகப் பார்த்த அந்த இளைஞர்களின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் மீது பவுன்சர்கள் நடத்திய தாக்குதலால் நொந்து போயுள்ளனர். குண்டுக்கட்டாக தூக்கி எறியப்பட்ட இளைஞரில் ஒருவர் பெரும்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த சரத்குமார். சரத்குமாரின் தாயார் சந்தோஷம், தனது மகனுக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசியுள்ளார்.

தாயார் வேதனையுடன் பேட்டி

அவர் பேசுகையில், "எங்க பையன் பேரு சரத்குமார். மதுரையில் விஜய் மாநாடு நடக்குது போறேன்னு சொன்னான். போகாதப்பான்னு சொல்லி வைச்சேன். இல்ல மாநாட்டுக்கு போகல. ஒரு இண்டர்வியூக்காக திருச்சிக்கு போறேன்னு சொல்லிட்டு அவன் மாநாட்டுக்கு போயிருக்கான். அது எனக்கு தெரியாது. போனில், "எங்கப்பா இருக்க?"னு கேட்டதுக்கு "இந்தா வர்றேம்மா"னு சொன்னான்.

விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் இவன் மேலே ஏறி போயிட்டான். அவன் அவ்வளவு தூரம் விஜய் மேல ஆர்வமா இருந்திருக்கான். சரி மேடையில ஏறிட்டான்.. பொறுமையா போப்பான்னு சொல்லி விலக்கி விட்டிருக்கணும். தூக்கி பந்தைக் கடாசுவது மாதிரி, குப்பையை தூக்கி எறியுற மாதிரி கடாசி இருக்காங்க. அவன் கை, கால் உடைந்து இருந்தால், உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது? என் மகனை எனக்கு யார் திருப்பித் தருவது?

எங்க பிள்ளைய இழந்திருப்போம்

என் குடும்பம் வசதி வாய்ப்பில்லாத குடும்பம். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என் பிள்ளையை வளர்த்தேன்னு எனக்குத்தான் தெரியும். ஒரு உயிரோட வேல்யூ என்னவென்று விஜய்க்கு தெரியுமா? விழுந்தானே அவனை நீங்கள் பிடித்தீர்களா? கண்டுக்காம நடந்து போய்க்கிட்டுதானே இருந்தீங்க... கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது கூட அவனை விஜய் பார்த்தும் கண்டுக்கல. அவன் கம்பியை பிடித்து தொங்கவில்லை என்றால் அன்றைக்கு செத்திருப்பான். நாங்க தான் பிள்ளையை இழந்து போய் இருக்கணும்.

உயிர் போனா வருமா?

இப்பவே உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால், மக்களுக்கு நீங்கள் எப்படி பாதுகாப்பு கொடுப்பீங்க? செய்கிறேன்... செய்கிறேன் என்று சொல்லக்கூடாது. ஆட்சிக்கு வரும் முன்பே ஒருத்தன் செய்யணும். மக்களிடம் அடுத்தவங்களை குறை சொல்லக்கூடாது. நம்ம செய்யணும். நம்ம மக்களுக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். உனக்காக வந்த ரெண்டு இளைஞர்கள் செத்து இருக்கிறார்கள். அவங்க உயிரை நீ என்ன பணம் கொடுத்தாலும், என்ன ஈடுகட்டினாலும் உயிரை நீ திரும்ப கொடுக்க முடியுமா?

அத்தனை பேருக்கும் அண்ணனாக நிற்கிறேன். அனைவருக்கும் தாய்மாமனா இருக்கிறேன் என்கிறாய். எப்படி நீ தாய்மாமனாக இருப்பாய்? உன்னை பார்க்க மாநாட்டுக்கு வந்தவனுக்கு நீ என்ன மரியாதை கொடுத்திருக்கிறாய்? உனக்குத்தான் பாதுகாப்பு என்றால் இருக்கிறவன் உயிர் போகவேண்டுமா? அதற்காக மற்றவர்களை தூக்கி வீசி விடுவீர்களா? எங்க வலி என்ன என்று தெரியுமா?" என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+