சென்னை பாடி மேம்பாலத்திற்கு அடியில் என்னப்பா நடக்குது.. வாகன ஓட்டிகளுக்கு மறக்க முடியாத பரிசு
சென்னை: சென்னை திருமங்கலம், பார்க் சாலையில் வரும் வாகனங்கள் போக்குவரத்து விதியை மீறி பாடி மேம்பாலத்தின் கீழ் ஒரு வழி பாதையில் புகுந்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது.. இதை தடுக்க பாடி மேம்பாலத்தின் கீழ் ஒரு வழி பாதையில் வந்த வாகனங்களை வளைத்து வளைத்து பிடித்து அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
சென்னை பாடி மேம்பாலம் மிக முக்கியமான மேம்பாலம் ஆகும். இதுதான் ஆந்திரா செல்லும் வாகனங்களையும், கோயம்பேட்டையும் இணைக்கும் பாலம் ஆகும். மறுபக்கம் அம்பத்தூரையும் வில்லிவாக்கத்தையும் இணைக்கும் பாலமாகும். இந்த பாலத்தில் ஏறி எளிதாக நான்கு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியும்..

ஆனால் சென்னை திருமங்கலம், பார்க் சாலையில் வரும் வாகனங்கள் போக்குவரத்து விதியை மீறி பாடி மேம்பாலத்தின் கீழ் ஒரு வழி பாதையில் புகுந்து செல்கிறார்கள். சுற்றி செல்வதற்கு விரும்பாத வாகன ஓட்டிகள் பலரும் ஒருவழிப்பாதையைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறதுது.
இதையடுத்து நேற்று காலை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஒரு வழி பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து அறிவுரை கூறி பாடி சரவணா ஸ்டோர் அருகே உள்ள சிக்னலை கடந்து செல்லுமாறு கூறி நேர்வழியில் அனுப்பி வைத்தார்.
ஆனாலும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதியை மீறி ஒரு வழி பாதையில் வந்த வண்ணம் இருந்தனர்.. அவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் ஒருக்கட்டத்தில் பொறுமை இழந்த போக்குவரத்து போலீசார் ஒருவழி பாதையில் வந்த 100-க்கும் மேற்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தார்கள்.
ஒரு வழிப்பாதையில் வந்தால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள் என்பதை அறிந்த வாகன ஓட்டிகள், ஒரு வழி பாதையில் பாதி வழியில் வந்து போலீசார் கண்டதும் வாகனத்தை திருப்பி சென்று, போலீசார் பிடியில் சிக்காமல் தப்பினார்கள். பாடியில் செய்தது போல் ஒருவழிப்பாதைகளில் பல இடங்களில் சென்னையில் போலீசார் சோதனை நடத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் சென்னையில் பல இடங்களில் சிக்னலை சுற்றி செல்லாமல் ஒருவழிப்பாதையில் செல்வது சர்வ சாதாரணமாக நடப்பதாகவும், இதனால் விபத்து அபாயம் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications