சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திநகரில் வாக்கிங் சென்ற பெண்ணிடம்.. சங்கிலி பறிக்க முயற்சி.. அரிவாளுடன் வந்த இருவருக்கு போலீஸ் வலை

Google Oneindia Tamil News

சென்னை: நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் பைக்கில் வந்த இரு ஆண்கள் அவரது தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    திநகரில் வாக்கிங் சென்ற பெண்ணிடம்.. சங்கிலி பறிக்க முயற்சி - திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

    சென்னை தியாகராய நகர் ராஜம்பாள் தெருவில் வசிப்பவர் சத்யநாராயணன். இவரது மனைவி சாந்தலா. இவர் நேற்று முன் தினம் காலை 7.15 மணிக்கு ஜிஎன் செட்டி சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது பின்பக்கமாக மோட்டார் சைக்கிளில் இருவர் வந்து கொண்டிருந்தனர். திடீரென சாந்தலாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை பிடித்து இழுக்க முயற்சித்தனர்.

    தூக்கி வீசல்

    தூக்கி வீசல்

    அப்போது இழுத்த வேகத்திற்கு சாந்தலா தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால் முட்டி, கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புகாரின் பேரில் போலீஸார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    சங்கிலி

    சங்கிலி

    இதுகுறித்து சாந்தலா கூறுகையில் நான் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. எனது சங்கிலியை இழுத்த போது அது வராததால் நாங்கள் கீழே விழுந்தேன்.

    வண்டியை நிறுத்திய திருடர்கள்

    வண்டியை நிறுத்திய திருடர்கள்

    அப்போது அந்த இருவரும் சிறிது தூரம் வண்டியை நிறுத்தி என்னை பார்த்தனர். ஒரு வேளை மீண்டும் வந்து முயற்சிக்கலாம் என நினைத்தனரோ தெரியவில்லை. அப்போது அங்கு வாக்கிங் சென்ற இருவர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர்.

    மிரட்டல்

    மிரட்டல்

    அப்போது முதுகில் இருந்து மிகப் பெரிய அரிவாளை காண்பித்து மிரட்டிவிட்டு தப்பிவிட்டனர். இந்த அரிவாளால் மிரட்டியது இந்த சிசிடிவியில் கவர் ஆகவில்லை. அந்த பக்கம் இருக்கும் வேறு சிசிடிவிகளை ஆய்வு செய்தால் தெரியும். எனவே வாக்கிங் செல்லும் பெண்கள் உஷாராக இருங்கள். ஆள்நடமாட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்லுங்கள் என்றார்.

    English summary
    Motorists tries to snatch gold chain from a woman who walks near GN Chetty road in T Nagar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X