நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..2 நாட்களுக்கு கனமழை..புயல் உருவாகுமா?..வானிலை அறிவிப்பு
சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில பகுதிகளில் டிசம்பர் 23, 24ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 22 வரை தமிழகம், இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. இந்த ஆண்டு இயல்பை ஒட்டியே மழை பதிவாகியுள்ளது. டிசம்பர் மாதம் வீசிய மாண்டர் புயல் பெரிய அளவில் மழையை கொடுக்கவில்லை என்றாலும் பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அடுத்த புயல் வருமா? பெரிய அளவில் மழையை தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வானிலை ஆய்வாளர்களும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணித்து கூறினாலும் சாரல் மழையை கூட பல மாவட்டங்களில் காணவில்லை.
கடுங்குளிர் ஆரம்பித்து விட்டதால் இனி மழை வருமா? வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்து விட்டதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மழையை நம்பி பயிரிட்ட பல விவசாயிகள் கருகும் பயிர்களை பார்த்து கவலையடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் சில சமயங்களில் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது தமிழ்நாடு, புதுச்சேரி கரையோரத்தில் இருக்கிறது என்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில பகுதிகளில் டிசம்பர் 23, 24ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 22 வரை தமிழகம், இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
டிசம்பர் 22ஆம் தேதியன்று ராமநாதபுரம், திருவாரூர்,நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை,தஞ்சாவூர், மயிலாடுதுறை,கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று முதல் டிசம்பர் 22 வரை தமிழகம், இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆண்டு தோறும் புயல் உருவாகும். இந்த ஆண்டு ஒரு புயல் மட்டுமே உருவாகி மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுவடையுமா? பெரிய அளவில் மழையை தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மார்கழி மாத குளிரும் பகல் நேரங்களில் வெயிலும் வாட்டி வருவதால் மழை பெய்தால் மட்டுமே கருகும் பயிர்களை காப்பாற்ற முடியும் என்று காத்திருக்கின்றனர் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications