பேச வார்த்தையே இல்லையே.. செந்தில் பாலாஜியை பார்த்ததும் எமோஷனல் ஆன ஜோதிமணி! கையை பிடித்து ஆறுதல்!
சென்னை : சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நேற்று ஜாமீன் கிடைத்ததை அடுத்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். இன்று அவரை அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர். அப்போது அவரைப் பார்த்து நலம் விசாரித்த கரூர் எம்பி ஜோதிமணி மிகவும் எமோஷனலாக காணப்பட்டதோடு, செந்தில் பாலாஜியின் கையைப் பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 450 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு, குற்றச்சாட்டு பதிவு போன்ற விவகாரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பறிமாற்ற அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று மாலை புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார்.
இன்று முதல் நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். தொடர்ந்து அவரை இன்று காலை திமுக அமைச்சர்களான மா சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் நேரில் சந்தித்து வரவேற்றதோடு வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

தொடர்ந்து செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரிலும், அவர் பொறுப்பு வகிக்கும் கோவையிலும், அவரது ஆதரவாளர்கள், திமுகவினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக பலரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக கரூர் எம்பி ஜோதிமணி வந்திருந்தார். முதலில் செந்தில் பாலாஜியை பார்த்ததும் பேச வார்த்தைகள் இன்றி துக்கம் தொண்டையை அடைக்க எமோஷனலாக காணப்பட்டார் ஜோதிமணி.
தொடர்ந்து அவரது கையைப் பிடித்து ஆறுதலும் வாழ்த்துக்களும் தெரிவித்த அவர் சிறிது நேரம் உரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," எந்தவித சமரசமும் இன்றி சட்டப் போராட்டம் நடத்தி செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்" என ஜோதிமணி கூறினார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications