வீடியோ கால்.. வகுப்பில் "அரைநிர்வாணம்".. மாணவிகளுக்கு தொல்லை.. அலட்சியமே காரணம்.. கொதிக்கும் ஜோதிமணி
பத்மா சேஷாத்ரி பள்ளி சம்பவம் குறித்து நடவடிக்கை கோருகிறார் எம்பி ஜோதிமணி
சென்னை: கிளாஸ் ரூமுக்குள் அரை நிர்வாணம்.. ராத்திரியில் வீடியோ கால் என பத்ம சேஷாத்ரி பள்ளி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் இன்று காலையில் இருந்து வெடித்து வருகிறது.. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.. அந்த வகையில், "குற்றம் இழைத்த ஆசிரியர் மீதும்,பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று எம்பி ஜோதிமணியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடத்தும்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.
இது குறித்து மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவும் செய்துள்ளார். அது சம்பந்தமான ஸ்கீரீன் ஷாட்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.

புகார்
"என்னுடைய ப்ராஜக்டை ஏற்றுக்கொள்வதற்காக, சார் என்னை தனியாக சினிமா பார்க்க அழைத்தார்... நான் எவ்வளவோ மறுத்தும் என்னை வற்புறுத்தினார்... கடைசியில், 'நான் உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேன்' என்று பதில் அனுப்பினார்.. அந்த உரையாடியதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவைத்துள்ளேன்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் கிளாஸ்
அதுமட்டுமல்ல, வகுப்பு குழுக்களில் "பார்ன்" வீடியோ லிங்க்கையும் ஷேர் செய்துள்ளாராம்.. ஆன்லைன் கிளாஸ் நடந்தால், அரை நிர்வாணமாக இடுப்பில் துண்டோடு வருவாராம்.. மாணவர்களை நள்ளிரவில் வீடியோ கால் செய்ய அழைப்பாராம்.. இந்த பிள்ளைகளை மட்டுமல்லாமல், சீனியர் மாணவிகளுக்கும் இப்படி டாச்சர் தந்துள்ளாராம்.. இந்த ஆசிரியர் 20 வருஷமாக இங்கு வேலை பார்த்து வருவதாக தெரிகிறது.

கண்டனம்
இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு குவிந்து வருகிறது... குறிப்பாக கனிமொழி எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன் உள்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

ட்வீட்
அதுபோலவே, கரூர் எம்பி ஜோதியும் ட்வீட் போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதில், "சென்னை #PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் முறைகேடாக நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்த புகார்களை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளது.குற்றம் இழைத்த ஆசிரியர் மீதும்,பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ட்வீட்டை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு டேக் செய்துள்ளார்.

தண்டனை
ஜோதிமணியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.. "அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் பள்ளி தான். இந்த பள்ளியின் மீது முதலிலேயே பல முறைகேடு புகார்கள் உள்ளதால் அரசு உடனடியாக இந்த பள்ளியை கையகப்படுத்த வேண்டும்.. ஒரு ஆசிரியர் மட்டும் அல்ல, அப்பள்ளியில் உள்ள மற்றும் பல ஆசிரியர்களும் இதில் ஈடுபட்டுள்ளார்கள். (பெண் ஆசிரியர்களும்) முக்கிய குற்றவாளியாக இவர் கருதப்படுகிறார். அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்' என்று தெரிவித்து வருகின்றனர்.

அதிர்ச்சி
சென்னையில் மிக முக்கியமான பள்ளிகளில் ஒன்றாக, பத்மா சேஷாத்திரியில் இப்படி ஒரு குற்றச்சாட்டா? என்று பல தரப்பினரும், பெற்றோர்களும் அதிர்ந்து போய் உள்ளனர்..
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications