ரெடியா இருங்க.. திமுக எம்பி கனிமொழி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
கனிமொழி மகளிரணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணி சகோதரிகள், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் காரணமாகத் மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் குளங்களாக மாறியுள்ளன.. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன... மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது..
சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. சுரங்கப்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.. மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலான மாவட்டங்களில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீர்
சென்னையில் 2 நாள் மழையின் தாக்கம் இன்னும் நீடிக்கிறது.. மாநகராட்சி நிர்வாகம் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது... திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 17 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிர்களும், 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான குறுவை பயிரும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிவாரண பணிகள்
திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில், மழை நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் 3வது நாளாக இன்றும் களத்தில் நேரடி ஆய்வில் ஈடுபட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.. அதேபோல அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. வீடுகளுக்குள் புகுந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மும்முரமாகி உள்ளனர்.

அறிவிப்பு
இதனிடையே, தமிழகத்திற்கு வருகிற 10ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மக்களை மேலும் கலங்க வைத்து வருகிறது.. அதுமட்டுமல்லாமல், இனி கனமழை தொடரும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையமும் அறிவித்துள்ளது.. அதிலும் குறிப்பாக, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிகவும் எச்சரிக்கை தேவை என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன.

திமுக
இந்நிலையில்தான், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை இருக்குமாறு திமுக மகளிரணிக்கு எம்பி கனிமொழி அறிவுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது: "வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகளிரணி
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணி சகோதரிகள், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்ய தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மகளிரணியினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், நிவாரணப் பணிகளின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications