ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக்
சென்னை: காவரி விவகாரம் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்காக மத்திய அரசுக்கு திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உதயநிதி மற்றும் எடப்பாடி சைலண்ட்மோடில் இருப்பதாகவும், ஏன் மோடியிடம் கேள்வி எழுப்பவில்லை என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த பிரச்சனையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் சைலண்ட் மோடில் இருப்பது ஏன். இப்போதும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நேரடியாக, பிரதமருக்கு கடிதம் எழுதி, தமிழ்நாடு உரிமைகளுக்காக உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கார்.

காவிரி உரிமைகள்
ஆனால் கனெக்ட்டிங் கால் பேசுகிற முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி அவர்களும், எதிர்க்கட்சி தலைவராக உள்ள உதயநிதி அவர்களும் அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் கேள்வி கேக்கல. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக மேகதாது பரிந்துரையை ரிஜக்ட் பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஆக்கபூர்வமாக பாதுகாக்கணும்.
முதலமைச்சர் லெட்டர் ரொம்ப கிளியரா சொல்லுது, இந்த திட்டம் உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கும், காவரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது. மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் விஷயம் இல்ல. இது நம்ம தண்ணீர். நம்ம விவசாயிகள், நம்ம தமிழ்நாடு உரிமைகள்.
ஒற்றுமையாக
தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த திட்டமும் வரக்கூடாது. முதலமைச்சர் கடிதத்திற்கு முழு ஆதரவு வழங்குவோம். தமிழ்நாடு உரிமைக்காக ஒற்றுமையாக நிற்போம்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு திமுகவினர் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications