கெட்ட பெயர்தான் அதிகம்! இனிமே பூட்டை ஆட்டாதீங்க! பட்டென சொன்ன திமுக எம்பி.. நடந்தது என்ன?
சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பரிந்துரை வழங்கும் வழக்கம் நீக்கப்பட்டது பற்றி திமுக ராஜ்ய சபா எம்பி எம்.எம் அப்துல்லா தெரிவித்த கருத்து ஒன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்பிக்கள் பரிந்துரை மூலம் மாணவர்கள் சேரும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக இந்த முறை இன்னும் கைவிடப்படவில்லை என்றாலும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த முறை நடைமுறையில் இருக்காது என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி கழகம் அறிவித்துள்ளது.
முன்னதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்பிக்கள் பரிந்துரையின் பெயரில் மாணவ, மாணவியர் சேர முடியும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி
ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட மாணவ, மாணவியர், அந்த தொகுதி எம்பி பரிந்துரை மூலம், அதே தொகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர முடியும். 6ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கும் இந்த வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. அதன்பின் 2016ல் இந்த வழக்கம் 10ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது.

எம்பி பரிந்துரை
ஆனால் தற்போது புதிய உத்தரவில் மாணவர் சேர்க்கைக்கு இனி பரிந்துரைகள் மேற்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்பிக்கள் பரிந்துரைகளின் கீழ் சிறப்பு ஒதுக்கீடுகளின் கீழ் யாரையும் சேர்க்க கூடாது. இதன் மூலம் செய்யப்படும் மாணவர் சேர்க்கைகளை உடனே நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிகளுக்கு அவசர கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவசர கடிதம்
இது தொடர்பாக திமுக ராஜ்ய சபா எம்பி எம்.எம் அப்துல்லா தெரிவித்த கருத்தில், ஒரு எம்.பி பத்து மாணவர்களைப் பரிந்துரைக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. இதுவரை 364 பேர் என்னிடம் பரிந்துரைக் கடிதம் கேட்டு மனு அளித்து இருந்தார்கள். அத்தனை பேருமே முக்கியமானவர்கள்தான்! இந்த கேந்திரிய வித்யாலயா பரிந்துரைகளால் எம்.பி களுக்கு இடம் கிடைத்தவர்களிடம் ஏற்பட்ட நல்ல பெயரை விட செய்ய முடியாமல் போனதால் பிறரிடம் ஏற்பட்ட கெட்ட பெயரே மிக மிக மிக அதிகம்.

கடும் விமர்சனம்
இந்த நடைமுறை நீக்கப்பட்டதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியே! தயவு செய்து இனி யாரும் பூட்டை ஆட்ட வேண்டாம், என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை நீக்கப்பட்டதை சில எம்பிக்கள் வரவேற்றுள்ளனர். சில எம்பிக்கள் இதை எதிர்த்துள்ளனர். காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்த நடைமுறை நீக்கப்பட்டது எம்பிக்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications