சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீர்ப்பே சொல்லியாச்சு.. போயி மீசையில் இருக்கும் மண்ண துடைங்க அண்ணாமலை சார்.. திமுக எம்பி பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பே சொல்லியாச்சு , நீங்க யாருங்க சார் ஏற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளாததற்கும் என திமுக எம்பி செந்தில்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    Perarivalan விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் ஆயுள் தண்டனைக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 142 சட்டவிதி எண்ணின் படி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிடுகிறோம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

    விடுதலை காற்றை சுவாசித்த பேரறிவாளன்... பறை மேளம் இசைத்து கொண்டாட்டம் விடுதலை காற்றை சுவாசித்த பேரறிவாளன்... பறை மேளம் இசைத்து கொண்டாட்டம்

    142 சட்டவிதி எண்

    142 சட்டவிதி எண்

    இந்த தீர்ப்பை திராவிடர் இயக்கங்களும், தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் , திராவிட இயக்கங்களும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை @BJP4TamilNadu ஏற்றுக் கொள்கிறது.

    ஒற்றுமை, பாதுகாப்பு

    ஒற்றுமை, பாதுகாப்பு

    நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்! என தெரிவித்திருந்தார். இதற்கு திமுக எம்பி செந்தில் குமார் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் தீர்ப்பே சொல்லியாச்சு நீங்கள் யாருங்க சார் ஏற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளாததற்கும்.

     போயி மீசையில் இருக்கும் மண்

    போயி மீசையில் இருக்கும் மண்

    போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு.. கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க. ஓ மீசையும் இல்லையா என்னால் உதவ முடியாது என திமுக எம்பி செந்தில் குமார் கிண்டலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    வார்த்தை போர்

    வார்த்தை போர்

    கடந்த சில தினங்களாக திமுக எம்பி செந்தில் குமாருக்கும் பாஜகவினருக்கும் இடையே ட்விட்டர் வார்த்தை போர் முற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அண்ணாமலை ஒரு கருத்தை பதிவிட அதற்கு பதில் கருத்தை திமுக எம்பி செந்தில் குமார் பதிவிட்டுள்ளார்.

    English summary
    DMK MP Senthil Kumar replies Annamalai that he accepts SC verdict on Perarivalan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X