MP Thambidurai Case: தம்பிதுரை ஆக்கிரமிப்பு வழக்கு.. சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்றம்.. அதிகாரிகளுக்கு செம டோஸ்
சென்னை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி எப்படியாவது ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பிரச்சனையாக சரி செய்ய முயற்சி செய்ய.. செய்ய புதிய பிரச்சனைகளும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், அதிமுக எம்பி தம்பிதுரை (MP Thambidurai Case) கல்வி நிறுவனம் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக கூறி நிலத்தை மீண்டும் அளவீடு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், அந்தக் கட்சியின் டெல்லி முகமாகவும் இருப்பவர் தம்பிதுரை. இவர் வருகிற சட்டமன்ற தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தம்பிதுரைக்கு சொந்தமாக சென்னை ஆவடி அருகே கோணம்பேடு பகுதியில் செயின்ட் பீட்டர்ஸ் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நீதிபதிகள் அதிருப்தி
இந்த கல்வி நிறுவனம் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில், "கல்வி நிறுவனத்திற்கான மாணவர் விடுதிகள், மின்சார துணை நிலையங்கள், தனியார் சாலைகள் உள்ளிட்ட கட்டுமானங்களை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நிலங்கள் அரசுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டவையாகும். அவற்றை மீட்டெடுத்து மீண்டும் பொது பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நில அளவீடு சர்வே அறிக்கை குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
தம்பிதுரைக்கு பின்னடைவு
"அரசுத் தாக்கல் செய்துள்ள நில அளவீடு அறிக்கை முழுமையானதாகவும், தெளிவானதாகவும் இல்லை. முக்கியமாக இது உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் புகார் சொல்லப்பட்டுள்ள நிலங்களை 2 வாரங்களுக்குள் மீண்டும் முறையாக அளவீடு செய்து விரிவான, தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. முக்கியமாக நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு தம்பிதுரைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications