சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மறைந்த எம்பி வசந்த குமாருக்கு கொரோனா நெகட்டிவ்.. மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி!

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த எம்பி வசந்த குமாருக்கு கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதால் அவரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    எச்.வசந்தகுமார் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

    கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா காரணமாக இவருக்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    MP Vasanthakumar gets negative for Coronavirus after his demise: People will be allowed for Final rituals

    இவருக்கு நெஞ்சு பகுதியில் சளி அதிகமாக இருந்த காரணத்தாலும், நுரையீரல் பகுதியில் தொற்று இருந்த காரணத்தாலும் உடல் நிலை மோசம் அடைந்தது. இதனால் இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் உடன் தொடர்ந்து இதனால் நலிவடைந்து வந்தது.

    நேற்று அவரின் உடல்நிலை மோசம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவரின் மறைவை தொடர்ந்து வசந்த குமாருக்கு மீண்டும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது.

    சகோதரர் வசந்தகுமாரின் மறைவு செய்தி கேட்டு குமரி அனந்தன் அதிர்ச்சி.. மருத்துவமனையில் அனுமதி!சகோதரர் வசந்தகுமாரின் மறைவு செய்தி கேட்டு குமரி அனந்தன் அதிர்ச்சி.. மருத்துவமனையில் அனுமதி!

    வசந்த குமாருக்கு கொரோனா நெகட்டிவ் வந்த நிலையில், அவரின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்த குமார் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வசந்தகுமாரின் உடல் அகதீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    English summary
    Congress MP Vasanthakumar gets negative for Coronavirus after his demise: People will be allowed for Final rituals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X