புறப்பட்டுடிச்சி "யானை"! 2026 சட்டசபைத் தேர்தலில் திருமதி ஆம்ஸ்ட்ராங் போட்டி! நடிகர் தீனா அதிரடி
சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் திருமதி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுவார் என நடிகர் தீனா சூளுரைத்துள்ளார். தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு நேற்றைய தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் தீனா இவ்வாறு தெரிவித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய சின்னஞ்சிறு குழந்தையும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என பொரிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களும் கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் பொற்கொடி துக்கம் தாளாமல் அழுதுவிட்டார். அவரை பார்த்து குழந்தையும் அழத் தொடங்கியது. ஏற்கெனவே குழந்தை அப்பா அப்பா என கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீதி வேண்டும் நீதி வேண்டும் , படுகொலைக்கு நீதி வேண்டும் என கோஷமிட்ட போது பொற்கொடியும் அவருடைய குழந்தையும் விழா மேடைக்கு வந்தனர்.
பொற்கொடியின் குழந்தை வெண்மை நிற ஆடை அணிந்துக் கொண்டு அப்படியே ஆம்ஸ்ட்ராங் மாதிரியே நடந்து வந்த காட்சிகளை பார்த்து அவருடைய ஆதரவாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். பொற்கொடிக்கு பெண்கள், வயதானவர்கள் எல்லாம் கையை பிடித்துக் கொண்டு அண்ணனை விட்டுட்டியே , தம்பியை விட்டுட்டியே என கதறிய காட்சிகள் காண்போரை கலங்க செய்தது.
இந்த கூட்டத்தில் நடிகர் தீனா, பேசுகையில், நாம் எத்தனை அசிங்கமான ஆட்கள்! இன்ஸ்டாகிராமில் ஒரு தம்பி கேட்கிறார், இத்தனை நாளாக எங்கடா போனீங்க, இப்படி அதிகார தோரணையுடன் உள்ள, மக்களுக்கு நல்ல செய்த ஒரு தலைவனை எப்படி இழந்தீர்கள் என கேட்டார். ஏன் உங்களால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியவில்லை என கேட்கிறார்.
ஆம்ஸ்ட்ராங்கை அதிகாரத்தில் உட்கார வைக்கும் விடுதலை இத்தனை காலமாக நடக்காதது ஏன்? யாருக்கோ ஓட்டு போட்டு இன்னும் அடிமையாகவே உட்கார்ந்திருக்கிறோமே அது ஏன்? இதுக்கு பதில் தெரியாமல் இந்த கோழைகளிடம் பேசுவது வேஸ்ட்! உண்மை அதுதான்!
இன்னொரு ஆம்ஸ்ட்ராங், இன்னொரு கன்சிராம் என அதிகாரத்திற்கு வரும் அத்தனை பேரும் கொல்லப்படுவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி இன்று ரவுடி என்ற பட்டத்தை வாங்கி இருக்கிறாரே ஆம்ஸ்ட்ராங், அவருக்காக இனி உங்கள் பயணத்தை தொடங்குங்கள். அப்படி முடியாவிட்டால் எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு வெளியே போங்க!
எல்லாரும் ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்கிறார்கள், அவர் ரவுடியா? (இல்லை என கோஷம்) அவர் ஒரு புரட்சியாளர். எங்களை போன்ற முதுகெலும்பு இல்லாத மக்களை படிக்க வைத்து உழைக்க வைத்து அதிகாரத்திற்கு கொண்டு போய் சேர்த்தார். ஆம்ஸ்ட்ராங் உடைந்து போன கண்ணாடி இல்லை, அதில் இருந்து வந்த ஒவ்வொரு சில்லும் ஆம்ஸ்ட்ராங்தான்.
ஜாதியில்லை என்று சொல்லுங்கள், மதம் இல்லை என்று சொல்லுங்கள். சமூகநீதி வேண்டும் என சொல்லுங்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்த அரசிடம் சொல்லுங்கள். எல்லாருக்குமான கல்வி, எல்லாருக்குமான உரிமை - இதைத்தான் ஆம்ஸ்ட்ராங் கேட்டிருந்தார்.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் திருமதி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுவார். ஜாதியை ஒழிக்க புறப்பட்டுடிச்சி இந்த யானை, மதங்களை அழிக்க புறப்பட்டுடுச்சி இந்த யானை, ஜாதியற்ற மனிதர்களை உருவாக்க புறப்பட்டுடுச்சி இந்த யானை, சமூகநீதியை நிலைநாட்ட புறப்பட்டுடுச்சி இந்த யானை! நாமெல்லாம் இந்த அரசிடமும் காவல் துறையிடமும் கேட்டுக் கொள்வது ஒன்றுதான் எங்களுக்கு நீதி வழங்குங்கள். இவ்வாறு தீனா தெரிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications