சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்கவில்லை.. ரசிகர்களை ஏமாற்றிய தோனி.. சென்னை வருகை ரத்து!

Google Oneindia Tamil News

சென்னை : செஸ் ஒலிம்பியாட் தொடரின் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

Recommended Video

    Operation Thamarai | கடுப்பான Bihar CM Nithish Kumar*Politics

    44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

    பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாடுகள் பற்றியும் சர்வதேச நாடுகளின் செஸ் வீரர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

     செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா! சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்! இந்தப் பக்கம் எல்லாம் போகாதீங்க செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா! சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்! இந்தப் பக்கம் எல்லாம் போகாதீங்க

    இறுதி நாள்

    இறுதி நாள்

    இதில் இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 6 அணிகள் விளையாடின. இதில் 3 ஆண்கள் அணிகளும், 3 பெண்கள் பெண்கள் அணிகளும் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன. இன்று காலை இறுதிச் சுற்று போட்டிகள் தொடங்கி இருக்கின்றன.

    இந்திய அணி

    இந்திய அணி

    11 சுற்றுகளில் முடிவில் அதிக புள்ளிகளை பெறும் அணியே செஸ் ஒலிம்பியாட் பட்டத்தை வெல்லும். நேற்று 10 வது சுற்று போட்டிகள் நடந்து முடிந்து இருக்கின்றனர். இந்திய பி அணியில் விளையாடிய தமிழ்நாடு வீரர் குகேஷ் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றிபெற்றும், ஒரு போட்டியில் சமனும், ஒரு போட்டியில் தோல்வியும் தழுவினார்.

    10 வது சுற்று

    10 வது சுற்று

    நேற்று நடைபெற்ற 10 வது சுற்று போட்டியில் இந்திய பி அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. இந்த போட்டியில் நோடிர்பெக்குடன் மோதிய குகேஷ், 72 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, சிண்டாரோவ் என்ற வீரரை எதிர்கொண்டார். அதில், 77 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று உள்ளார். நிஹல், அந்திபன் ஆகிய 2 இந்திய வீரர்கள் சமன் செய்துள்ளார்கள்.

     தோனி பங்கேற்கவில்லை

    தோனி பங்கேற்கவில்லை

    செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழிலும் அவர் பெயர் இடம்பெற்ற நிலையில், திடீரென தோனி இதில் பங்கேற்க மாட்டார் என்று திடீரென தகவல் வெளியானது. தோனி இந்த விழாவுக்காக அமெரிக்காவில் இருந்து கிளம்புவது தாமதமானதால், அவர் சென்னை வரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்கவில்லை.

    English summary
    MS Dhoni didnt participate chess olympiad final in Mamallapuram: மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதிநாளான இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இதில் பங்கேற்கப்போவதில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X