பட்டினியால் செத்ததும்.. குடோன்கள் கொள்ளாமல் கோதுமையை விளைவித்ததும் ஒரே நாடா? பின்னணியில் ஒரு தமிழர்!
சென்னை: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். நாட்டு மக்கள் பட்டினியால் கொத்துக் கொத்தாக மாண்ட காலத்தில், துயர் பொறுக்காமல் வேளாண் ஆராய்ச்சித் துறையில் கால் பதித்த தமிழரான எம்.எஸ்.சுவாமிநாதன், நாட்டு மக்களைக் கொன்றொழித்த பஞ்சத்தை நாட்டை விட்டே விரட்டுவதில் பெரும் பங்கு ஆற்றியவர்.
தந்தை மருத்துவர் : எம்.எஸ்.சுவாமிநாதன் விலங்கியல் பட்டப்படிப்பு முடித்தபோது, 1940களில் ஏற்பட்ட வங்க பஞ்சத்தால் கொத்துக் கொத்தாக மக்கள் சாவதை அறிந்த சுவாமிநாதன், குடும்பத்தினரின் மருத்துவர் கனவை தள்ளி வைத்துவிட்டு விவசாயப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். தந்தை நடத்திய மருத்துவமனையை ஏற்று நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன், நாட்டின் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக வேளாண் ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்தியாவில் பெரும் பஞ்சம்: வேளாண் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். அப்போதுதான் 1960-களில் இந்தியாவில் மழை பொய்த்துப் போய் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பீகார், பஞ்சாப் மாநிலங்கள் கடுமையான பஞ்சத்தின் பிடியில் சிக்கின. எந்த அளவுக்குப் பஞ்சம் என்றால், அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திய மக்கள் வாரத்தில் ஒரு நாள் இரவு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும், என்று ஹோட்டல்களை மூட உத்தரவிட்டார்.
பஞ்சம் பசி பட்டினியை தவிர்க்க அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. நாள் முழுவதும் அமெரிக்காவில் இருந்து கோதுமையுடன் கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வந்து இறங்கிக் கொண்டிருந்தன. பின்னர் லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமர் ஆனார். வியட்நாம் மீது அமெரிக்கா குண்டு வீசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததால், கோபம் கொண்ட அமெரிக்கா, இந்தியாவிற்கான கோதுமை ஏற்றுமதியை குறைத்து, ஒரு கட்டத்தில் முழுமையாக நிறுத்தியது.
கேலி செய்த உலக நாடுகள்: கோதுமைக்காக அமெரிக்காவை நம்பி இருந்த இந்திய மக்கள் அச்சமடைந்தனர். இந்தியாவில் பஞ்சம் மீண்டும் தலைதூக்கியது. உலக நாடுகள் இந்தியாவின் நிலையைப் பரிகசித்தன. 1966ல் உணவு தானிய உற்பத்தி பெருக்கத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. அப்போதைய மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியமும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் பசுமைப் புரட்சி திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டினர்.
பின்னாளில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நார்மன் போர்லாக் கண்டுபிடித்த மெக்ஸிகன் குட்டை ரக கோதுமை மூலம் கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெறலாம் என நினைத்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். அவரை இந்தியாவிற்கு வரவழைத்து மெக்ஸிகன் கோதுமையை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஆலோசனை பெற்றார். இந்தியா கோதுமை விதையை இறக்குமதி செய்து பயிரிட்டது. கோதுமை சாகுபடியில் பெரும் வெற்றி பெற்றார் சுவாமிநாதன்.
கோதுமைப் புரட்சி: புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், டபுள் மடங்கு லாபத்தையும் சாதித்துக் காட்டினார் எம்.எஸ்.சுவாமிநாதன். இதை 'கோதுமைப் புரட்சி' என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி. சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்தார். இந்திய-ஜப்பான் கலப்பின அரிசியை உருவாக்கினார். அவரது அயராத உழைப்பால் இந்தியா உணவு உற்பத்தியில் படிப்படையாக முன்னேறி தன்னிறைவு பெற்றது.
குடோன்கள் கொள்ளவில்லை: பட்டினி கிடந்த நாட்டில், கோதுமையை சேமித்து வைக்க இடமின்றி பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள் முழுக்க கோதுமை குடோன்களாக மாறும் நிலை ஏற்பட்டது. 'பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு' எனக் கூறும் எம்.எஸ்.சுவாமிநாதன் நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி 1970களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தியை, உள்நாட்டின் தேவையை விட அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கினார்.
பஞ்சத்தாலும், பட்டினியாலும் சக மனிதர்கள் வயிறு வற்றி, துள்ளத் துடிக்க மாண்ட துயரம் கண்டு வெதும்பி, வேளாண் ஆராய்ச்சித் துறையை தேர்ந்தெடுத்த எம்.எஸ்.சுவாமிநாதன், தனது இறுதிக்காலம் வரை வேளாண் ஆராய்ச்சிகளுக்கும், விவசாய பயிர் உற்பத்தி முறைகளில் புதுமைகளைப் புதுத்துவதற்காகவுமே செலவிட்டார். எம்.எஸ்.சுவாமிநாதனின் விவசாயப் புரட்சி என்றென்றும் போற்றுதலுக்குரியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications