தாம்பரம் டூ கிளாம்பாக்கம் வழி ஊரப்பாக்கம்.. செங்கல்பட்டுக்கும் நல்ல செய்தி? எம்டிசி சூப்பர்
சென்னை: சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் போதிய பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. ஏனெனில் சென்னையில் உள்ள மக்கள் தொகையும், புதிதாக தினமும் வருபவர்களின் எண்ணிக்கையும் அந்த அளவிற்கு அதிகம். நிறைய புறநகர் பகுதிகள் வளர்ந்துவிட்டன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பின்னர் புறநகரில் அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம்பரம் டூ கிளாம்பாக்கம் இடையே புதிய பேருந்து வழித்தடத்தை எம்டிசி அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பின்னர் பல்வேறு புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது . குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக புதிய வழித்தடங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கிளாம்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் வழியாக ஆதனூரை கடந்து படப்பை மெயின் ரோடு வழியாக பழைய பெருங்களத்தூரை கடந்த தாம்பரம் வரும் வகையில் புதிய வழித்தடத்தை அறிமுகம் செய்துள்ளது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்
புதிய வழித்தடம் பற்றிய அறிவிப்பு விவரம்
தடம் எண் 55P: தாம்பரம் - கிளாம்பாக்கம்.
(வழி: தாம்பரம், பழைய பெருங்களத்தூர், மண்ணிவாக்கம் கூட்ரோடு, ரூபி பில்டர்ஸ், ஸ்ரீநிகேதன் பள்ளி, காசா கிராண்ட், கணேஷ் நகர், படப்பை மெயின் ரோடு ஜங்ஷன், ஆதனூர் P.U.O, கிரவுன் பேலஸ், அண்ணாநகர், செல்வராஜ் நகர், ஊரப்பாக்கம் ரயில் நிலையம், ஆதனூர் மெயின் ரோடு, வண்டலூர் பூங்கா / ஊரப்பாக்கம் பள்ளி வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.).

இதனிடையே சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு பதில் அளித்துள்ளது. பயணி ஒருவர், புதுப்பாக்கத்தில் இருந்து சிறுசேரிக்கு செல்ல வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக கூறினார். பல நேரங்களில் இது அம்பேத்கர் கல்லூரி வரை மட்டுமே செல்கிறது என்றும். புதுப்பாக்கத்திலிருந்து சிப்காட்டிற்கு ஒரு நாளைக்கு 3-5 முறை சரியான பேருந்து அல்லது மினி பேருந்து அலுவலகம் செல்வோருக்கு உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்டிசி கூறியது.
இதேபோல் பழைய வழித்தடம் தடம் எண் 554 (தியாகராயர் நகர் - சுங்குவார்சத்திரம்) பேருந்து சேவை மீண்டும் தொடங்க வாய்ப்புகள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு உரிய அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டதாக எம்டிசி பதில் அளித்தது,.
அதேபோல் இரவு நேரங்களில் பலர் சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக செங்கல்பட்டுக்கு திரும்பி பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படுகிறது. எனவே கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு பேருந்து சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பயணி கோரிக்கை வைத்தார். அதற்கு பரிசீலிக்கப்படும் என்று பதில் அளித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications