இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு.. யார் இவர்? விவரம்!
சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். 101 உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் 9 பேர் என மொத்தம் 110 பேர் ஒருமனதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியனை தேர்வு செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான மாநில பொதுக் கூட்டம் இன்று சென்னை சூளைமேட்டில் காலை முதலே நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 3 முறை முத்தரசன் மாநில செயலாளராக பதவி வகித்து இருந்துவிட்டதால், புதிய மாநில செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறும். இதில் 3 முறை தொடர்ந்து முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் புதிய மாநில செயலாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன் உள்பட பலர் பங்கேற்றனர். 101 உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் 9 பேர் என மொத்தம் 110 பேர் ஒருமனதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியனை தேர்வு செய்தனர்.
சென்னை வியாசர்பாடியில் வசித்து வருகிறார். 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை அமைப்பான, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2018 அம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணை மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார்.
1979 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்த மு. வீரபாண்டியன் பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்களில் பங்கேற்றார். கட்சியின் பல்வேறு பதவிகளில் இருந்து வந்த வீரபாண்டியன் தற்போது மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications