Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டுவசதி.. பதிவுத்துறைக்கு பறந்த உத்தரவு.. இதை உடனே முடிச்சிடுங்களேன்.. "முதல்வரின் முகவரி" அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பதிவுத் துறைகளுக்கு, முதல்வரின் தனிப்பிரிவு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. என்ன அது?

தமிழக அரசு துறைகளுக்கு பொதுமக்கள் புகார்கள், கோரிக்கைகளை கூறி மனுக்களை அனுப்புவார்கள்.. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.. ஒருவேளை, அம்மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாதபோது முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் மனுக்களை அனுப்புவார்கள்.

Mudhalvarin Mugavari and What are the major instructions to the TN Revenue Department

முதல்வரின் முகவரி: இதற்காகவே, கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்ததுமே, "முதல்வரின் முகவரி" என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டது... அதாவது, முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு, "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.

முதலமைச்சர் தனிப்பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ் தற்போது உள்ள பல்வேறு அலுவலகப் பிரிவு அலுவலர்கள், முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படும் அலுவலர்கள் ஆகியோர் முதல்வரின் முகவரி துறையின் கீழ் பணிபுரிவார்கள்.

கோரிக்கைகள்: முதல்வரின் கட்டுப்பாட்டிலேயே இந்த புதிய துறை செயல்படும் என்றும், முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கக்கூடிய திட்டம் என்பதால், இங்கு வரக்கூடிய மனுக்களும் கோரிக்கைகளும் விரைந்து தீர்க்கப்படும்.. அந்தவகையில், முதல்வரின் முகவரி திட்டத்தில் இதுவரை 10.53 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாம்..!!

சமீபத்தில் நடந்த அனைத்து துறை செயலாளர்கள் கூட்டத்தில் "முதல்வரின் முகவரி" மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. அப்போது, முதல்வரின் முகவரி திட்டத்தில், 2.51 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதுவரை 1.27 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது..

வருவாய்த்துறை: அதாவது, அதிகபட்சமாக வருவாய் துறையில் 52,837 மனுக்களும் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறையில் 17,807 மனுக்களும் நிலுவையில் உள்ளதாம்.. எனவே, இதற்கான காரணம் குறித்து துறைகளின் உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியாகியிருந்தது. அத்துடன், மத்திய அரசு துறைகள் சார்ந்து முதல்வரின் முகவரிக்கு வந்திருக்கும் மனுக்களை தனியாக ஆய்வு செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த மனுக்களின் நிலவரம், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம், போன்றவை எதுவுமே முதல்வரின் அலுவலகத்துக்கு வரவில்லையாம்.. எனவே, இதுகுறித்து முதல்வரின் தனி பிரிவு அதிகாரிகள் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்கள்:

முதல்வரின் முகவரி: அதில், முதல்வரின் முகவரி திட்டத்தில், வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை, பதிவுத் துறைக்கு, பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. அவற்றின் மீதான நடவடிக்கை குறித்த பதிலை, "முதல்வரின் முகவரி" இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+