ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு திருமணம் எப்போது? தேதியை அறிவித்தார் முகேஷ் அம்பானி
சென்னை: இந்திய பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த் அம்பானியின் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த தகவலை அவரது தந்தையும் ரிலையன்ஸ் நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ உள்ளிட்ட ஏராளமான தொழில்களை செய்து வருபவர் முகேஷ் அம்பானி. இவருடைய தந்தை திருபாய் அம்பானி போட்ட விதையை இன்று ஆலமரமாக்கியுள்ளார் முகேஷ். இவர் தற்போது உலக பணக்காரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

திருபாய் அம்பானி அப்போது இருந்த வசதிக்கு அவருடைய மகனுக்கு பணக்காரர்கள் பெண் கொடுக்க காத்திருந்திருப்பர். ஆனால் திருபாய் அம்பானியோ தனக்கு பணம் பெரிதல்ல என கருதி குணவதியான நீடா அம்பானியை திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
நீடா அம்பானி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர். மேலும் அவர் பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இவருடைய பரத நாட்டிய நிகழ்ச்சியில்தான் தனது மகனுக்கு ஏற்ற ஜோடி நீடாதான் என முடிவு செய்தார் திருபாய். இதையடுத்து திருபாய் அம்பானி, நீடாவின் தந்தையிடம் பெண் கேட்டு சென்றார். ஆனால் முகேஷோ நான் அந்த பெண்ணுடன் பேசி பழக வேண்டும்.
எனக்கு அந்த பெண்ணையும் அந்த பெண்ணுக்கு என்னையும் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு நாள் காரில் நீடாவை அழைத்துக் கொண்டு ஒரு டிரைவ் போனார் முகேஷ். இருவரும் மனம் விட்டு பேசியதில் பிடித்து போய்விட்டது. இதையடுத்து டும் டும் டும் நடந்தது.
இவர்களுக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய இரு மகன்களும், இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானிக்கு வைர வியாபாரியின் மகள் ஸ்லோகாவை திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அது போல் ஈஷாவுக்கு திருமணமாகிவிட்டது. அவருக்கும் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ராதிகா என்கோர் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணைத் தலைவரான வீரேன் மெர்ச்சன்ட்- ஷைலன் மெர்ச்சன்ட்டின் மகளாவார்.

அம்பானி வீட்டில் விசேஷம் என்றாலே மக்களுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ளும். படுகிராண்டாக இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இருவருக்கும் எப்போது திருமணம் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தனது மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண தேதியை முகேஷ் அம்பானி அறிவித்தார்.
அதன்படி அடுத்த ஆண்டு (2024) ஜூலை 10, 11, 12 ஆகிய 3 தேதிகளில் பல்வேறு சடங்குகளுடன் நடைபெறும் என வெளியிட்டிருக்கிறார். இந்த திருமண தேதி வைரலாகி வருகிறது. அடுத்தது மாமியார் நீடா தனது இளைய மகன் திருமணத்திற்கு என்ன உடை அணிய போகிறார், என்ன விலையில் அணிய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ராதிகாவும் ஆனந்தும் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடைசியாக இருவரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டனர். ஆனந்த் அம்பானி மட்டும் ரூ 14 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரில் பாஜக பிரமுகர் வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வந்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications